“செங்கோட்டையன் சும்மா ஒன்னும் போகல.. கொங்கு பகுதியில் காலியாகும் அதிமுக!” - மூத்த பத்திரிகையாளர்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய்யை சந்தித்திருக்கிறார். விரைவில் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது அதிமுகவுக்கு கொங்கு பகுதியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
இன்று விஜயை சந்தித்து இருப்பதன் மூலம், பல்வேறு வதந்திகளுக்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இன்று காலை தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் திமுகவில் இணைவார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன.

ஆனால், தற்போது விஜய்யை சந்தித்திருப்பதன் மூலம் அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது உறுதியாகியிருக்கிறது. செங்கோட்டையன் ஒரு அணியாக சென்று தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வார் என்று பேசப்பட்டது. டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருடன் விஜய்யை சந்திப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தற்போது தனியாக சந்தித்திருக்கிறார். 9 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். 50 ஆண்டு கால அரசியலில் ஏராளமான அனுபவங்கள் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. இதெல்லாம் தமிழக வெற்றி கழகத்திற்கு பயன்படும்.
ஆனால், அக்கட்சியில் இளம் தலைமுறையினர் அதிகபட்சமாக இருப்பார்கள் என்பதால், இவருடைய அரசியல் பணிக்கும் இளைஞர்களின் நிர்வாக தலைமைக்கும் இடையில் பொருத்தம் சரியில்லாமல் கூட போகலாம்.
அதேபோல அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவெகவுக்கு சென்று இருப்பது, அதிமுகவில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் பிரியலாம் என்கிறாய் ஊகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை, அதிமுகவைப் பற்றி விஜய் நேரடியாக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. இருப்பினும் செங்கோட்டையனின் பிரிவு அதிமுகவை பலவீனப்படுத்தும்.
பொதுவாக அதிமுகவிலிருந்து விலகுபவர்கள் திமுகவுக்குதான் வருவார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அப்படி எல்லாம் இல்லை தமிழக வெற்றி கழகத்திற்கு கூட போக முடியும் என்கிற கேட்டை செங்கோட்டையன் ஓபன் செய்திருப்பதாக கருதுகிறேன். இதே போல அதிமுகவின் ஆதரவு வாக்குகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதரவு வாக்குகள் சரிய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, இதை காது கொடுத்து கேட்காதது மட்டுமல்லாது, செங்கோட்டையனை ஓரம் கட்டவும் தொடங்கினார். பிரிந்தவர்கள் சேர 10 நாட்கள் அவகாசம் தருகிறேன் என்று செங்கோட்டையன் பேசியது எடப்பாடியை சீண்டியது. இதனையடுத்து 10 நாட்கள் அவகாசமும் முடிந்தது. இதனையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இறுதியாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து நேற்றிரவு புறப்பட்டு காலை சென்னை வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications