கட்டப்பஞ்சாயத்து செய்பவர் கோயிலை நிர்வகிப்பதா? சேகர்பாபுவை அல்லேலூயா பாபு என விமர்சித்த ஹெச்.ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பஞ்சாயத்து செய்பவர் இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகிப்பதா என அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.

கோயில் நிலத்தை எடுப்பேன் எனக் கூறும் அமைச்சர் சேகர்பாபு, நல்லாவே இருக்கமாட்டார் என்று சாபம் விட்ட ஹெச்.ராஜா, சேகர்பாபுவை அல்லேலூயா பாபு என விமர்சித்தார். அமைச்சர் சேகர்பாபு மீது ஏற்கனவே கோபத்தில் இருந்து வரும் ஹெச்.ராஜா, பிரஸ்மீட்டில் அதனை தீர்த்துக்கொண்டார்.

Senior BJP leader H.Raja has criticized Minister Sekar Babu as to Katta Panchayat person

இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகிக்க சேகர்பாபு லாயக்கற்றவர் என்றும் இந்து விரோதி எனவும் ஹெச்.ராஜா விமர்சித்தார். கோவிலையும், கோவில் நிலத்தையும் அமைச்சர் சேகர்பாபு கொள்ளையடித்து வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு வேறு அமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு அராஜகமான நபர் என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஹெச்.ராஜா ஒரு பக்கம் இவ்வாறு விமர்சனம் செய்தாலும், திமுக ஆட்சி தான் இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் என அமைச்சர் சேகர்பாபு பல முறை பெருமிதமாக பல மேடைகளில் பேசியிருக்கிறார்.

ராஜகோபுரங்கள், மகா மண்டபம், மலைப் பாதை சீரமைத்தல், என திருக்கோயில் திட்டப்பணிகளை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து துவக்கி வைத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+