தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை கைவிட்டால் சீமானுடன் கூட்டணி பேச்சுக்கு பாஜக ரெடி: எச்.ராஜா பரபர
சென்னை: தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை கைவிட்டால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பாஜக தயார் என அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது; சீமான் இன்று பேசுகிற கருத்துகளை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் பேசி இருக்கிறேன். அவருடன் நெருக்கமான உறவும் இருந்தது. அண்மையில் கூட பாஜகவை வரவேற்பதாக சீமான் கூறியிருந்தார். சீமானின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நான் 4 முறை பங்கேற்றிருந்தேன்.

சீமான் தமது தமிழ் தேசியம் என்கிற பிரிவினைவாதத்தைக் கைவிட்டால் நெருங்கி செல்லலாம். தமிழ் தேசியம் என்பது ஒரு பிரிவினைவாதம். திராவிடம் என்பதை சீமான் ஏற்கவில்லை. அதேபோல தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை பாஜகவும் ஏற்கவில்லை.
சீமான் இஸ் மை குளோஸ் பிரண்ட். அவருக்கு நான் ஒன்றை சொல்கிறேன். தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை கைவிடுங்கள். நாம் தனித்தனியே இருந்தால் எதுவும் செய்ய முடியாது. சீமான் பகுத்தறிவுடன் சிந்தித்து தமிழ் தேசிய நிலைப்பாட்டை மாற்றினால் அவருடன் அடுத்ததாக பேச தயார். இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications