அஞ்சல் சேமிப்பு திட்டம்.. மூத்த குடிமக்களுக்கான செம வாய்ப்பு.. மாதம் 20,500 ரூபாய் கிடைக்கும்.. ஆஹா
சென்னை: இந்திய அஞ்சலக திட்டத்தில் உள்ள சிறப்பான மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
வங்கிகளில் மட்டுமேயல்லாமல், போஸ்ட் ஆபீசிலும் சேமிப்பை தொடங்க மத்திய அரசு உதவுகிறது.. சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக இருக்கும்படியான உத்தரவாதமும் தரப்படுகிறது.

இதற்கு எத்தனையோ சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், இதில் முக்கியமானது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். வேறு எந்த சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்கக்கூடியது.
யார் யார் கணக்கு தொடங்கலாம்: Senior Citizen Saving Scheme எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது... விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்... அதேபோல சூப்பர்ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்ட நபர்களும் இந்த திட்டத்தை துவங்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை (எஸ்சிஎஸ்எஸ்) திறப்பது எப்படி?: எஸ்சிஎஸ்எஸ் கணக்கினைத் தொடங்க மூத்த குடிமக்கள் எதேனும் வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்ய விரும்புவோர் ரொக்கமாகவே டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாகவே கணக்கைத் தொடங்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தொகை 1000 மடங்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கில் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது.. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதிர்வு காலத்துக்கு முன்பே அசல் தொகையை எடுக்கலாம். இருந்தாலும், அதற்கு 1.5 சதவிகிதம் வரை பிடித்தம் இருக்கும்.
வட்டித்தொகை: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், 8 சதவீத வட்டி கிடைக்கும்.. அதாவது, SCSS கால்குலேட்டரின்படி, 5 வருடங்களில் நீங்கள் 6,00,000 ரூபாய் வட்டியாக 15 லட்சத்திற்கு மட்டுமே பெறுவீர்கள். இந்தத் தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்காக வழக்கமான வருமானத்தை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
மேலும், இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவடைந்த பிறகு மறுபடியும் 3 வருட காலங்கள் வரைக்கும் நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மூலமாக இந்திய வரிச் சட்டம் 1961 பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரைக்கும் முதலீட்டாளர்கள் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வம்: இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான எஸ்சிஎஸ்எஸ் திட்டமானது பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டமாக கருதப்படுவதால்தான், இதில் பெரும்பாலானவர்கள் டெபாசிட் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது உயர்ந்துள்ளது. மற்ற வங்கி சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்பு நிதிகள் போன்றவற்றைக் காட்டிலும் இது அதிகமாகும்.
மாத வருமானம்: அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிப்பதாலும், வட்டி விகிதத்தை அதிகரிப்பதாலும், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் 7.6 சதவீத வட்டியில் முதிர்வு காலத்தில் ரூ.20.70 லட்சம் பெறப்பட்டது. இது ஆண்டுக்கு 1.14 லட்சமாகவும், மாதந்தோறும் 9500 ரூபாயாகவும் இருந்தது. இப்போது 20,500 ரூபாய் பலன் கிடைக்க போகிறது.












Click it and Unblock the Notifications