தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி செய்து கொண்டிருப்பது அரசியல் சட்ட விரோதம்.. வாபஸ் பெறுங்க- டிகே ரங்கராஜன்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து கொண்டிருப்பது அரசியல் சட்டவிரோதம்; அவரை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்று மூத்த இடதுசாரித் தலைவர் டிகே ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் டிகே ரங்கராஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
1969 இல் நடந்த மகாவீர் பிரசாத் எதிர் பிரபுல்ல சந்திரா வழக்கில், ஆளுநரின் இசைவு (அல்லது மகிழச்சி) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 164 (1) இல் உறுதி செய்யப்பட்டுள்ள ஆளுநரின் திருப்தி அல்லது இசைவு என்பதன் தன்மை, பிரிவு 164 (2) இன் தன்மையை பொறுத்ததே; அதன்படி ஆளுநர் ஓர் அரசின் மீதான மகிழ் ச்சியை அல்லது இசைவை திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது, அந்த சட்டமன்றம், அந்த அமைச்சரவையின் மீது நம்பிக்கை இழந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வது என்ற நிகழ்வுடன் மட்டுமே கட்டாயம் இயைந்து செல்வதாக இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பின் பொருள், ஆளுநர் என்பவருக்கு அரசாங்கத்தின் மீது தனிப்பட்ட திருப்தியோ,அல்லது இசைவோ இருக்க முடியாது என்பதுதான். 1974 இல் சம்ஷெர் சிங் மற்றும் இதரர்கள் எதிர் பஞ்சாப் அரசு- வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்,
"ஜனாதிபதி மற்றும் ஆளுநர் என்பவர்கள் அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் படி அனைத்து நிர்வாக மற்றும் இதர அதிகார அமைப்புகளின் பாதுகாவலர்களாக இருக்கி றார்கள்; அவர்கள் தங்களது அரசியல் சட்டப் பூர்வ அதிகாரங்களை, சில குறிப்பிட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, அமைச்சரவையின் அறிவுறுத்தலின் அடிப்ப டையில் மட்டுமே பிரயோகிக்க முடியும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சொன்னது என்ன?
2016 இல் நபம் ரெபியா மற்றும் இதரர்கள் எதிர் துணை சபாநாயகர் (அருணாசலப் பிரதேசம்) மற்றும் இதரர்கள் வழக்கில் உச்சநீதிமன்றம், ஆளுநர்க ளின் அதிகாரம் குறித்து டாக்டர் அம்பேத்கரின் கருத் துக்களை சுட்டிக்காட்டியுள்ளது: ''அரசியலமைப்புச் ட்டத்தின் அடிப்படை யில் ஆளுநர் என்பவர் தானாகவே தனிப்பட்ட முறையில் நிறைவேற்றுவதற்கான எந்த வேலையும் இல்லை; உண்மையில் எந்த வேலையும் இல்லை. அவருக்கு எந்த வேலை யும் இல்லை என்றாலும் அவர் செய்வதற் கென்று குறிப்பிட்ட கடமைகள் உள்ளன. இந்த வேறுபாட்டை அவையின் செயல்பாடு கள் அவருக்கு உணர்த்தும்." டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்ட இந்த வழிகாட்டுத லைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில்,
''ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறப்படுகிற அரசியல் சட்டப்பிரிவு 163 என்பது, உண்மையில் ஆளுநர் என்ப வர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அமைச்ச ரவை அளிக்கும் அறிவுரை இல்லாமலோ அல்லது அதற்கு எதிராகவோ செயல்படுவ தற்கு ஒரு பொதுவான தனித்த அதிகாரம் எதையும் அளிக்கவில்லை'' என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் மாநில அரசின் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். மாறாக அத்துமீறி மாநிலத்தில் குழப்பம் விளைவிப்பதும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் அரசியல் சட்டவிரோதமானதாகும். இப்போது தமிழ்நாட்டில் ரவி செய்து கொண்டி ருப்பது அரசியல் சட்ட விரோதம். அவரை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!. இவ்வாறு டிகே ரங்கராஜன் எழுதியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications