முனைவர் பட்டம்.. முட்டுக்கட்டையிட்ட மூடர்கள்..சங்கரய்யா இரங்கலில் ஆளுநர் ரவி மீது ஆ.ராசா பாய்ச்சல்!
சென்னை: மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
102 வயதில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யா இன்று காலமானார். தேசத்தின் விடுதலைக்காக போராடி சிறை தழும்புகளை தாங்கியவர். நாட்டின் தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக வாழும் காலம் முழுவதும் அப்பழுக்கற்ற இடதுசாரித் தலைவராக திகழ்ந்து 'இன்குலாப் ஜிந்தாபாத்" என புரட்சி முழக்கமிட்டவர் சங்கரய்யா.

இந்திய அரசியலில்- தமிழ்நாட்டு அரசியலில் நெடும் பயணத்தில் இணைந்திருக்கும் மகத்தான மாபெரும் ஆளுமை புரட்சியாளர் சங்கரய்யா. 102 வயதில் முதுமையில் மறைந்த சங்கரய்யாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த தகைசால் தமிழர் - முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்குச் செவ்வணக்கம்! தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம் என அறிவித்திருந்தார். இந்த இரங்கல் அறிக்கையிலேயே, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த விவகாரத்தை சுட்டிக் காட்டி கடுமையாக சாடி இருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கரய்யா இரங்கல் செய்தியில், ஆளுநர் ரவியின் அண்மைய இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆ.ராசா எம்.பி: திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி. தமக்கே உரிய பாணியில் கடுமையாக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமது இரங்கல் குறிப்பில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா எம்.பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அதிகாரப்பூர்வமாய் 'இந்திய' தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரைய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி! இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications