பின்னை இட்ட தீ தென் இலங்கையில்..பட்டினத்தாரின் வரிக்கு சரியான சாட்சி இப்போது.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
சென்னை: முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே !
எனும் பட்டினத்தார் வரிக்கு இப்பதான் சரியான காட்சி அமைந்திருக்கு.. என்று தென்னிலங்கை நிலவரம் தொடர்பாக மூத்த திமுக தலைவரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:
தன்_வினை_கண்_முன்னே.
அதே_மே_மாதம்
அன்று 2009 முள்ளிவாய்க்கால்.
இன்று மே 2022.
இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ பிரபாவின் (விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன்) வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது. இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன். அன்றைக்கு வெளிப்பட்ட வேதனை இன்றைக்கு அதனுடைய தன்வினை தன்னைச் சுடுகிறது என்ற செய்தி மெய்யாகிறது.
போர் முடிவுக்கு வந்தபோது வல்வெட்டித்துறை வீடு உடைக்கப்பட்டதாகவும், பின் சிங்கள மக்கள் உட்பட நிறையப் பேர், நம் நாட்டில் வாழ்ந்த தன்னிகரற்ற ஒரு வீரன் வாழ்ந்த வீடு என அந்த வீட்டின் மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர் என்றும் சொல்லப்பட்டது. இதை அனுமானித்த இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் எனப் பயந்து தலைவரின் வீட்டையே இல்லாமல் செய்து விட்டதாக சொன்னார்கள்.

வரலாறு, திருப்பி அடிக்கும். பிறகு மொத்தமாய் அழிக்கும். ராஜபக்சே பூர்வீக வீடு 120 ஆண்டுகள் பழையதாம். பிறந்தது, வளர்ந்தது, அரசியலுக்கு வந்தது, பிரதமரானது, அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது, போர் முடிவுகளை தீர்மானித்தது எல்லாம் இங்குதானாம். நேற்று மக்கள் எடுத்த தீர்மானத்தில் தீயில் அழிந்தது.
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...!
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்குதோ.....
பிரபாகரன் வீடு வல்வெட்டித்துறையில் தரைமட்டமான அவர் பிறந்த இல்லம், அவர் சிறுபிராயம் மற்றும் இளமைக்காலத்தில் உட்கார்ந்து பேசிய மரத்தடியில் எடுத்த புகைப்படங்கள்......
இந்த இடத்திற்கு பல வரலாறுகள் உண்டு. இம்மரத்திற்கு கீழிருந்து பிரபாகரன் பலரிடம் பேசி போராளிகளாக மாற்றிய வீரவரலாறும், இந்த மரத்தின் கீழுள்ள மண்ணுக்குண்டு. இங்கே இன்றைக்கு சிறு வட்ட வடிவ மேடை அமைத்துள்ளார்கள்.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே !
பட்டினத்தார் வரிக்கு இப்பதான் சரியான காட்சி அமைந்திருக்கு..

புரட்சி தோற்றுப்போகலாம்
வீழ்ந்து போகாது...
சர்வாதிகாரிகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.!
அது முசோலினியோ, ஹிட்லரோ, ராஜபக்சேவோ.!
மக்களிடம் அறியாமை இருக்கும் வரையில் அல்லது வாழ்வாதாரம் பாதிக்காத வரையில் பிரச்சினை இல்லை.!
Recommended Video
சிங்களர்களே.., உங்களுக்காக தமிழர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!
சிங்களர்களே.., உங்களுக்காக இசுலாமியர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!
கடைசியில் சிங்களர்களையே பட்டிணியால் கொல்லும்போதுதான்..,
அய்யோ ராஜபக்சே ஒட்டுமொத்த இலங்கையையும் அழிக்க போகிறான் என்பது அவர்களுக்கு புரிந்தது.!
இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications