திமுக, மதிமுக, அதிமுக.. 'அரசியல் ஸ்லீப்பர் மோடு' செஞ்சியாருக்கு 'ரீசார்ஜ்' தரும் நடிகர் விஜய்!
சென்னை: நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் பலமாக அடிபடுவது "செஞ்சி ராமச்சந்திரன்" என்ற பெயர்தான்.. 10 ஆண்டுகள் ஆக்டிவ் அரசியலிலேயே இல்லாமல் முழு ஓய்வில் இருந்து வரும் செஞ்சியார் என்கிற செஞ்சி ராமச்சந்திரன்தான் தற்போது அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்; அக்கட்சியின் அவைத் தலைவராகிறார் என செய்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மிக நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த விஜய் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

விக்கிரவாண்டி மாநாடு: விக்கிரவாண்டியில் விஜய் நடத்தும் த.வெ.க. முதல் மாநாட்டை அனைத்து கட்சிகளும் மிக உன்னிப்பாக கவனிதது வருகின்றன. இநத மாநாட்டில் சில கட்சிகளின் சீனியர்கள் இணையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இநதப் பட்டியலில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் செஞ்சி ராமச்சந்திரன். தற்போது அண்ணா திமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சியார் என்கிற செஞ்சி ராமச்சந்திரன், விஜய் கட்சியில் இணையும் போது அவருக்கு அந்த கட்சியின் அவைத் தலைவர் என்கிற நடைமுறையில் டம்மியான, ஆனால் கட்சி அமைப்பில் முதன்மைப் பதவி வழங்கப்பட உள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்: சரி யார் இந்த செஞ்சி ராமச்சந்திரன் என்கிற கேள்வி எழுகிறதா? விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை பிறப்பிடமாகக் கொண்டவர். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர். வட தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த (இன்றைய கடலூர், விழுப்புரம்) காலத்தில் 1978-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக கோலோச்சியவர். 1977, 1980, 1989 சட்டசபை தேர்தல்களில் வென்று திமுக எம்.எல்.ஏ.வானார்.
மதிமுக டூ திமுக: 1993-ல் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்ட போது அவருடன் சென்ற மூத்த மாவட்ட செயலாளர்களில் செஞ்சி ராமச்சந்திரனும் ஒருவர். வைகோ தொடங்கிய மதிமுகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்; அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். மதிமுக வேட்பாளராக 1998, 1999 தேர்தல்களில் திண்டிவனம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 1999-ம் ஆண்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு மீண்டும் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 2006-ம் ஆண்டு வைகோவுடன் மோதல் ஏற்பட்டு மதிமுகவை விட்டு வெளியேறி தாய்க் கழகமான திமுகவில் இணைந்தார். 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்கும் என இலவு காத்த கிளியாக எதிர்பார்த்த செஞ்சியாருக்கு திமுக தலைமை சீட் தரவில்லை.
அண்ணா திமுகவில் பத்தோடு பதினொன்றாக..: 2014-ம் ஆண்டு தேர்தலிலும் தமக்கு திமுக தலைமை சீட் தராது என்பதால் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் தந்தை பெரியார் விருது, செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அண்ணா திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த நிலையில் செஞ்சி ராமச்சந்திரன் ஒரு ஓரமாக உட்கார வைக்கப்பட்டது சர்ச்சையாகவும் பேசுபொருளாகவும் இருந்தது.
ஸ்லீப்பர் மோடு செஞ்சி ராமச்சந்திரன்: தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு ஆக்டிவ் அரசியலிலும் இல்லாதவர்தான் செஞ்சி ராமச்சந்திரன். தற்போது 80 வயதாகும் செஞ்சியார் அரசியலில் போக்கிடம் இல்லாத நிலையில் இருந்து வருகிறார். இவரைத்தான் தற்போது நடிகர் விஜய் கட்சி "தூக்கியிருக்கிறது"....அரசியலில் ஸ்லீப்பர் மோடுக்குப் போய்விட்ட செஞ்சி ராமச்சந்திரனுக்கு விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் அவைத் தலைவர் பதவி கொடுத்து ரீ சார்ஜ் செய்ய முயற்சிக்கிறார் நடிகர் விஜய்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications