அருண் கோயலுக்கே பிடிக்காத விஷயத்தை பாஜக செய்ய சொன்னதா? அது என்ன? பாயிண்டை பிடித்த சீனியர் புள்ளி
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது ஏன் என்பதை விளக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவருடைய ராஜினாமா தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோயல் நேற்று முதலே பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் மூவர் இடம் பெறவேண்டிய நிலையில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் , பாஜகவின் அழுத்தம் காரணமாக அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது ஏன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கிறது. அவருக்கு ஓய்வு காலம் என்பது 2027 இல்தான்.
3 தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது இருவர் மட்டுமே உள்ளார்கள். அருண் கோயலின் இந்த ராஜினாமாவால் தற்போது ஒரு தேர்தல் ஆணையர் இருக்கும் அமைப்பாக மாறிவிட்டது. என்னை பொருத்தமட்டில் அருண் கோயல் பாஜகவின் கிளை அலுவலகத்தை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடத்தி கொண்டு வந்தார்.
அவருடைய மனதிற்கே பிடிக்காத ஒரு விஷயம். என்ன இவர்கள் கேட்டார்கள். அந்த விஷயத்தை அருண் கோயல் விளக்கினால் நன்றாக இருக்கும். அருண் கோயல் விலகலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் நம் இந்திய ஜனநாயகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கிடையாது.
தேர்தல் ஆணையம் பல காலங்களில் பாரபட்சமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது மத்தியில் எந்த ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன்தான் நடந்து கொண்டது. ஆனால் இந்த மாதிரி திடீர் ராஜினாமாவை நான் பார்க்கவில்லை. இந்த ராஜினாமாவின் பின்னணி என்ன என்பதை அருண் கோயல்தான் விளக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
ஏனென்றால் அவருக்கும் இந்திய ஜனநாயகத்தில் பங்கு இருக்கிறது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரும் இந்த மத்திய அரசாங்கமும் விளக்க வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications