நியூஸ் 18 டிவி சேனலின் மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு பணியிலிருந்தபோது மாரடைப்பால் மரணம்
சென்னை: மூத்த பத்திரிகையாளரும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் ஒருங்கிணைப்பாளருமான திருநாவுக்கரசு மாரடைப்பால் பணியில் இருந்த நிலையில் காலமானார்.
தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய திருநாவுக்கரசு பின் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினார், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

காலத்தின் குரல் நிகழ்ச்சிக்கான விவாத பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்தவர் திருநாவுக்கரசு, திராவிடர் இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
இன்று காலத்தின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
இதழியல் துறையை தம் மூச்சாக வாழ்ந்த திருநாவுக்கரசு பணியின் போதே அகால மரணமடைந்தது தமிழ் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மூத்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசின் உடல் எண் 8/80, திருவள்ளூர்பேட், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, சென்னை-28ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், படைப்பாளிகள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications