மோரில் விஷம்.. உதட்டில் நஞ்சு தடவிய ஜெயலலிதா.. எம்ஜிஆரின் மர்ம மரணம்.. பகீரை அவிழ்த்துவிட்ட பிரபலம்
எம்ஜிஆர், ஜெயலலிதா மரணம் குறித்து பழ கருப்பையா பேசியது ஷேர் ஆகிவருகிறது
சென்னை: மோரில் விஷம் கலந்து கொடுத்ததால் எம்ஜிஆர் இறக்கவில்லை, ஜெயலலிதா பயன்படுத்திய லிப்ஸ்டிக்கில் விஷம் கலந்து தடவியதன் மூலம் எம்ஜிஆருக்கு விஷம் ஏறியது என்று பேசியது சர்ச்சையானதாக மூத்த தலைவர் பழ கருப்பையா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலி ஆடு
இதையடுத்து, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அதெப்படி ஓபிஎஸ், எடப்பாடி இருவரின் பெயருமே அறிக்கையில் இடம்பெறவில்லையே? பலிஆடு ஆக்கப்பட்டுள்ளனர் சசிகலாவும், அதிகாரிகளும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

உதட்டில் நஞ்சு
இந்நிலையில், மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவும், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளருமான பழ. கருப்பையா முன்பு ஒருமுறை ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. அந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, மறைந்த ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, திமுகவை இரும்புக்கோட்டை என்று பாராட்டியதுடன், திமுகவிற்கு ஆதரவாகவும் பழ கருப்பையா பேசியிருக்கிறார்.. அந்த வீடியோதான் இணையத்திலும் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. பழ.கருப்பையா பேசிய பேச்சின் சுருக்கம்தான் இது:

மோரில் விஷம்
"ஜெயலலிதாவின் மரணத்தை குறித்து இப்போது நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்... இதுக்கு முன்பு எம்ஜிஆர் இறந்தபோதுகூட, ஜானகியம்மா, மோரில் விஷத்தை கலந்து கொடுத்து எம்ஜிஆரை கொன்றுவிட்டதாக ஜெயலலிதா கிளப்பிவிட்டார்.. உணவில் விஷத்தை கலந்து கொடுத்ததால் தான் எம்ஜிஆர் இறந்ததாக ஜெயலலிதா அப்போது பொய் பிரச்சாரம் செய்தார்.. ஜெயலலிதாவின் இந்த் குற்றச்சாட்டுக்கு விஎன் ஜானகி தரப்பினர் அளித்த விளக்கம் அப்போது சர்ச்சையானது... அதாவது, மோரில் விஷம் கலந்து கொடுத்ததால் எம்ஜிஆர் இறக்கவில்லை, ஜெயலலிதா பயன்படுத்திய லிப்ஸ்டிக்கில் விஷம் கலந்து தடவியதன் மூலம் எம்ஜிஆருக்கு விஷம் ஏறியது என்று பேசியது சர்ச்சையானது..

சமாதி + ஆவி
20 வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் இறந்தபோது என்னென்ன மர்மங்கள் கிளம்பியதோ,அப்படித்தான் இன்றைக்கும் ஜெயலலிதா மரணத்தில் புதுசு புதுசாக மர்மங்கள் கிளம்புகிறது. நான் ஒன்று கேட்கிறேன்.. ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்றதுமே, மறுநாளே ஆட்சி அனைத்தும் ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.. உண்மையிலேயே அந்தம்மாவின் விசுவாசியாக நீ இருந்தால், டீக்கடை வைத்திருந்த உன்னை முதலமைச்சராக்கிய அந்தம்மா மீது உனக்கு விசுவாசம் இருந்திருந்தால், அவருக்கு எதிரான சதியில் இருந்து மீட்டு அவரை வெளியே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?

40 நிமிஷங்கள்
அவரை சுற்றி உள்ள கும்பல் நல்ல கும்பல் கிடையாது.. அதனால்தான் சாவில் மர்மம் என்ற ஐயம் மக்களுக்கே உள்ளது.. உன்னிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை வைத்து, அந்த மர்மத்தை நீயே அப்போது கண்டுபிடிச்சிருக்கலாமே? எல்லாம் முடிந்தபிறகு, அந்தம்மா புதைக்குழிக்கு போன பிறகு, முதல்வர் பொறுப்பில் இருந்து உன்னை கீழே இறக்கிவிட்டபிறகு, சமாதிக்கு போய் 40 நிமிஷம் எதுக்கு தியானம் செய்யணும்? அம்மாவின் ஆவி இவருக்குள்ளே இறங்கிடுச்சாம்.. பெரியார் பிறந்த நாட்டில் எப்படி இறங்கும்? அவரவர் ஆவியே அவரவரை காப்பாற்றி கொள்ள முடியாதபோது, அந்தம்மா ஆவி எப்படி இவருக்குள்ளே இறங்கிச்சு?.. ஏன்என்றால் மீடியாக்காரர் சமாதிக்கு வந்து சேருவதற்கு 40 நிமிஷம் ஆகிடுச்சு.. அதான் அந்த 40 நிமிஷ லேட் மர்மம்.

4 ஓட்டைகள்
பொன்னையன் என்பவர் மந்திரியாக இருந்தவர்.. சசிகலாவிடம் அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை டிவியில் அப்பட்டமாக காட்டினார்கள்.. நீங்கதான் பொதுச்செயலாளராக வந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று சசிகலாவிடம் சொன்னவர் இந்த பொன்னையன்தான்.. ஆனால், ஓபிஎஸ் பக்கம் வந்ததுக்கு பிறகு, "ஆணியை வைத்து ஜெயலலிதா கன்னத்தில் 4 தடவை குத்தினார்கள்.. அதனால்தான் 4 ஓட்டை இருக்கிறது என்றார் இதே பொன்னையா.. பிஎச் பாண்டியன் என்ற வானளாவிய பொய்யன் என்ன சொன்னார் தெரியுமா? ஆஸ்பத்திரியில் இறக்கவில்லை, வீட்டில் இருந்து, இறந்தே தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க என்றார்.. இதுதான் இவர்களின் அரசியல்.. வேற காரணம் எதுவும் கிடையாது.. இப்படி இருந்தால் இந்த கட்சி பிளவுபடாமல் வேறென்ன ஆகும்? என்றெல்லாம் அந்த வீடியோவில் கேள்வி எழுப்புகிறார் பழ கருப்பையா.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications