மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு தரப்படும் முக்கிய துறை? "அந்த" அமைச்சர் மாற்றமாமே.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த அமைச்சர் துரைமுருகனின் அமைச்சரவை துறை விரைவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் தவறாக பேச கூடாது. பொது இடங்களில் பேசும் போது கவனமாக பேச வேண்டும், என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வலம் வர தொடங்கி உள்ளன.

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் மீண்டும் அமைச்சரவை மாற்றம் விரைவில் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Senior minister Duraimurugan might be changed amid the Tamil Nadu Cabinet reshuffle by CM Stalin

அமைச்சர் துரைமுருகன் மாற்றம்?

இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நீர்வளத்துறை அமைச்சராக சரியாக செயல்படவில்லை.

பெரிய அளவில் துடிப்பாக செயல்படவில்லை. அதோடு கர்நாடகாவில் ஆட்சி மாறும் நிலையில் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களுக்காக அடிக்கடி டெல்லி செல்ல வலுவான அமைச்சர் ஒருவர் தேவை. அதனால் இளம் அமைச்சர் ஒருவர் இந்த துறைக்கு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாறாக சட்டத்தில் நல்ல அனுபவம் கொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறைக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சட்டம் மற்றும் நீதிமன்றங்களை வகித்து வரும் எஸ்.ரெகுபதி, தொழில்துறை அமைச்சராக வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Senior minister Duraimurugan might be changed amid the Tamil Nadu Cabinet reshuffle by CM Stalin

அமைச்சரவை மாற்ற பிளான்

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அமைச்சரவை மாற்றத்திற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மாற்ற வாய்ப்பு குறைவு. அவர் மீது கைவைக்க வாய்ப்பு இல்லை. அவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கம்.

அவர் மீது கை வைத்தால் கூட அவருக்கு வேறு பெரிய அமைச்சரவை கொடுப்பார். அவர் இப்போதே முக்கியமான துறையில்தான் இருக்கிறார். முதல்வருக்கு மிகவும் வேண்டியவர்.

அவரின் துறையில் சில குளறுபடிகள் உள்ளன. பலர் தேர்வு எழுதவில்லை. பள்ளிகளில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் அதற்காக அவர் மாற்றப்படுவார் என்பது சந்தேகம்தான். அவர் மாற்றப்பட வாய்ப்பு இல்லை.

Senior minister Duraimurugan might be changed amid the Tamil Nadu Cabinet reshuffle by CM Stalin

அவரை மாற்றினாலும் அவருக்கு பெரிய அமைச்சர் பதவி ஏதாவது கொடுப்பார்கள்.

டி ஆர் பி ராஜாவை அமைச்சராக்க திமுகவில் முயற்சி நடக்கும். டெல்டாவில் பெரிதாக அமைச்சர் இல்லை. தஞ்சாவூரிலேயே அமைச்சர் இல்லை. பூண்டி கலைவானனும் இருக்கிறார். அவருக்கும் கூட கொடுக்கலாம். இரண்டு வருடம் கழித்து அமைச்சரவைக்கு புதிய லுக் கொடுக்க வேண்டும். ஒரே ஆட்கள் இருக்க கூடாது.

ஒரே ஆட்கள் இருந்தால் சிக்கல். ஜெயலலிதா போல உடனே மாற்ற கூடாது. இரண்டு வருடம் ஆகிவிட்டது. இப்போது மாற்றலாம். 2 வருடம் சில அமைச்சர்களுக்கு டைம் கொடுத்துவிட்டோம்.

இப்போது பிரஷ்ஷாக இறக்க வேண்டும். செயல்படாத அமைச்சர்களை மாற்ற வேண்டும். சீனியரோ, ஜூனியரோ தூக்கி போட தயங்க கூடாது. ஸ்டாலினிடம் ஏற்கனவே பிளான் இருக்கிறது. அமைச்சரவையை மாற்றுவது பற்றி அவர் ஆலோசனை செய்து வருகிறார்.

அவர் நடவடிக்கை எடுப்பார் என்று, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+