சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல் பாஜகவை கதிகலங்கவைத்துள்ளது- குவியும் பாராட்டுகள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகளுக்கான குரலை சங்கநாதமாய் எழுப்பியது பாஜகவை கதிகலங்கவைத்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்றைய பேச்சு சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் இடம்பெற்ற சில பாராட்டு பதிவுகள்:

 வம்புசண்டைக்கு வர்றீங்களா?மோடி முன்பாக போட்டி அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் வம்புசண்டைக்கு வர்றீங்களா?மோடி முன்பாக போட்டி அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

அருமையான உரை

அருமையான உரை

இடதுசாரி இயக்க மூத்த படைப்பாளி பேராசிரியர் அருணன் பதிவிட்டிருப்பதாவது: பிரதமர் மோடி முன்னிலையில் திராவிட மாடல் பற்றியும்,
இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றியும், தமிழின் உரிமைகள் உள்ளிட்ட நமது கோரிக்கைகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தது அருமையாக இருந்தது. அந்தக் காலத்தில் எடப்பாடி இப்படியா பேசினார்? முதல்வர் ஸ்டாலினின் உரிமைக்குரல் அண்ணாமலையை
கதிகலங்க வைத்துள்ளது. புலம்புகிறார். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை பிரதமரிடம் சொன்னது மரியாதைக் குறைவாம்! எடப்பாடி போல ஜால்ரா அடித்திருக்க வேண்டுமாம்! அதனால்தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு இவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்

8 ஆண்டுகளாக என்ன செய்தீங்க?

8 ஆண்டுகளாக என்ன செய்தீங்க?

திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி, இந்த 8 ஆண்டுகளில் கச்சதீவுக்காக தங்களின் மோடி அரசு இலங்கைக்கு எழுதிய ஒரு கடிதம் காட்டுங்கள் பார்ப்போம்! நீதிமன்றத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தீர்? பாஜக மாநாட்டில் என்றாவது கச்சதீவினை மீட்க ஒரு தீர்மானமாவது போட்டது உண்டா? காங்கிரஸ் கொடுதால் என்ன நீங்கள் மீட்கலாமே? என பதிவிட்டுள்ளார்.

நம்பிக்கை தரும் முதல்வர்

நம்பிக்கை தரும் முதல்வர்

@SankarRayan என்ற நெட்டிசன் பதிவு: தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இன்றைய பேச்சு மிக முக்கியமானது. கவனத்துக்குரியது. பாராட்டுதலுக்குரியது. நாகரீகமும், பக்குவமும், அர்த்தமும் கொண்டது. பிரதமர் மோடியை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு செய்யத் தவறியதையும், செய்ய வேண்டியதையும் முகத்துக்கு நேரே சொன்னது நம்பிக்கையளிக்கிறது.எல்லோரும் பார்த்திருக்க - பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூக நீதியில், சமத்துவத்தில் முன்னணியில் இருக்கிறோம் என தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தையும், தனித் தன்மையையும் உபதேசித்தது மிகச் சிறப்பு.
இந்த நாடும், மக்களும் பேச வேண்டிய அரசியல் எது என்னும் அஜெண்டாவை மிச் சரியாக முன் வைத்து இருக்கிறார்.நாகரீகமற்ற, மூர்க்கத் தனமான, வெறுப்பும் துவேஷமும் கொண்ட பாசிச அரசியலுக்கு அந்த மேடையில் இடமில்லாமல் செய்து விட்டார். வாழ்த்தி வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

எல்லோருக்கும் எல்லாம்..

எல்லோருக்கும் எல்லாம்..

திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் @vengateshkumarr தமது பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை வைத்து கொண்டே ஒன்றிய அரசு என்றும்/ஒன்றிய அமைச்சர்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக " 13 "முறை அடித்து சொல்லி நாம் யார் என்று பிரகடனம் செய்தார்! தமிழ்நாட்டின் வளத்தை/வலிமையை-பிரதமர் நரேந்திர மோடிக்கு புரியவைத்தார்! குறிப்பாய் சமூகநீதி உரத்து சொன்னார்!செம்மொழி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க நீட் தேர்வை ரத்து செய்ய ஜிஎஸ்ட் நிலுவை தொகையை வழங்கிட..மேடையிலேயே " Tamilnadu is a leading state of the Indian Union " என்று பறைசாற்றினார்!"எல்லோருக்கும் எல்லாம்" என்று முடித்தார்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எழுதியுள்ளார்.

English summary
Senior Political leaders hailed Tamilnadu CM MK Stalin's yesterday Speech in Social Medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X