ஆளுநர் ரவிக்கு அதிகாரமே இல்லை.. பிரதமர், அமித்ஷா தயவால் திமுக அரசுக்கு தொல்லை.. மூத்த பத்திரிகையாளர்
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தயவால்தான் தமிழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் ஆளுநருக்கென எந்த அதிகாரமும் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சுமார் 46 பக்கங்களை கொண்ட இந்த ஆளுநர் உரையானது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்தது. அதில் இருப்பதை ஆளுநர்கள் படிக்க வேண்டும்.

அது போல் நாடாளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் அங்கு மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை குடியரசுத் தலைவர்கள் படிக்க வேண்டும். இதுதான் மரபு. ஆனால் நேற்றைய தினம் உரையாற்ற வந்த ஆர்.என்.ரவி, சுமார் 4 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
ஆளுநர் உரையில் இருந்த திருக்குறளை படித்த அவர் முதல் பக்கத்தில் இருந்த பொதுவான விஷயங்களை படித்துவிட்டு உரையில் இல்லாதவற்றை தாமாக பேசினார். அதாவது சட்டசபையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.

இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக் கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழகம், வெல்க பாரதம்.. நன்றி என ஆளுநர் தெரிவித்துவிட்டு அமர்ந்தார். ஆளுநர் உரையை அவர் முற்றிலும் புறக்கணித்தார்.
இதையடுத்து ஆளுநர் படிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் அந்த உரையை படிக்கும் வரை ஆளுநர் அவையிலேயே இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். நாட்டுப் பண் இசைத்தவுடன் அவர் கிளம்ப முற்பட்டிருந்தார். ஆனால் ஆளுநர் உரையை முடித்தவுடன் அப்பாவு பேசுகையில் ஆளுநர் உரையை குறைவாகத்தான் படித்தார். அதை நாங்கள் குறைவாக சொல்லவில்லை.
தேசியக் கீதம் குறித்து அவர் மனதில் தோன்றியதை பேசினார். அது போல் எங்களுக்கு தோன்றுவதை சொல்கிறேன், வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ 50 ஆயிரம் கோடியை ஆளுநர் வாங்கி தர முடியுமா என கேட்டார்.
மேலும் சாவர்க்கர், கோட்சேவுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல தமிழக மக்கள் என கூறியிருந்தார். இது குறித்து தனது உதவியாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார். உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து புறப்பட்டு சென்றார். நாட்டுப் பண் இசைப்பதற்குள் ஆளுநர் புறப்பட்டுச் சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழக அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபைக்கென்று சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அது போக மரபுகள், மாண்புகள் இருக்கின்றன. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் என்பது அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்தது.
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைத்த ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே வெளியேறிவிட்டார். அரசியல் சாசனம் என்ன வகுத்துள்ளதோ அதன்படிதான் ஆளுநர் நடக்க வேண்டும். அதைத் தாண்டி அவருக்கான அதிகாரம் எதுவும் கிடையாது. ஆனால் தனக்கு இல்லாத அதிகாரங்களை அவரே எடுத்துக் கொள்கிறார் என்றார்.
அது போல் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார் ஆளுநர் ரவி. இதுவே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷாவின் தயவால்தான் இவையெல்லாம் நடக்கிறது.
எந்தளவு தமிழ்நாட்டுக்கு தொல்லை கொடுக்க முடியுமோ திமுக அரசுக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். சட்டசபையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும்தான் மரபு. இந்த மரபை மாற்றுவதற்கு இவர் யார் என ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications