"லாக்" ஆன செந்தில் பாலாஜி.. நீதிமன்றக் காவல் 25வது முறையாக நீட்டிப்பு.. நீதிபதி அல்லி உத்தரவு!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். தற்போது அவர் சிறையிலிருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர்... மொத்தம் 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
புழல் சிறை: அதேபோல, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்கள் ஒவ்வொரு முறையும் முடிவடையும் தருவாயில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.
கடந்த வாரம்கூட, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11ம் தேதி வரை அதாவது இன்றைய தினம் வரை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இதன்மூலம் 24வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த காவல் இன்றுடன் முடிவடைவதால், கோர்ட்டில் மீண்டும் காணொளிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
25வது முறையாக: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை: செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார். எனவே, இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரஉள்ள நிலையில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்று வழக்கு: இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், ஒருபக்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தும், மற்றொருபக்கம், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டும் வருவதால், நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி.
தேர்தலும் நெருங்கி கொண்டிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தினம் தினம் பெருகி கொண்டிருக்கிறது.!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications