நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video
சென்னை: நான் தோத்து போய்ட்டா, ராஜினாமா செய்வேன்னு சொன்னாரே அமைச்சர் விஜயபாஸ்கர்.. எப்போ ராஜினாமா செய்ய போறாரு?" என்று நேத்தே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார் செந்தில் பாலாஜி!
அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜிதான் வேட்பாளர் என்றதுமே அதிமுக, அமமுக தரப்பினருக்கு அடிவயிற்றில் பகீர் வந்தது.
ஏனென்றால் செந்தில்பாலாஜி முன்பு யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் காணாமலே போய்விடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்!

நிர்ப்பந்தங்கள்
அதனால்தான் அதிமுக ரொம்பவே மெனக்கட்டது. காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி இதுவாகும். மேலும், ஒரு ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் என நியமித்தார்கள். வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எல்லோருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஏகப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு ஆளானது.

வஞ்சகம்
இதற்காகவே இந்த தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் கொண்ட குழும் தயாரானது. இதில் செந்தில்பாலாஜியை தோற்கடிக்க உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கர் ரொம்பவே மெனக்கட்டார். "செந்தில் பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த, நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று அமைச்சர் விஜயபாஸ்கரே செய்தியாளர்கள் முன்னிலையில் ஒருமுறை கூறினார்.

ஜெராக்ஸ்
ஆனால் செந்தில்பாலாஜியை கடைசிவரை யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை. திமுகவின் கடைசி நாள் பிரச்சாரத்துக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு தடைபோடப்பட்டது. 2000 ரூபாய் பணத்தை ஜெராக்ஸ் எடுத்து தருகிறார் என்று இறுதிநேரத்தில் பரபரப்பை கிளப்பினார்கள். அதிலும் ஒன்றும் செய்யவில்லை.

டெபாசிட்
அதற்காக பணப்புழக்கம் இல்லை என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது. திமுக, அதிமுக, அமமுக என எல்லாரும்தான் பணத்தை வாரி இறைத்ததாக சொல்லப்பட்டது. கடைசியில் 37,824 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். பிரச்சாரத்தின்போது, அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன் என்றும், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சவால் விடுத்தார்.

ராஜினாமா
நேற்று ஜெயித்தவுடன் செந்தில்பாலாஜி கேட்ட முதல்கேள்வி இதுதான். செய்தியாளர்களிடம் பேசியபோது, "என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் சொன்னாரே, எப்போது ராஜினாமா செய்வார்" என்று கேள்வி எழுப்பினார். அதனால் இப்போதே உள்ளூர் அமைச்சருக்கு குடைச்சல் ஆரம்பமாகி உள்ளது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications