செந்தில் பாலாஜி நள்ளிரவு கைதுனு சொல்றாங்க! கேஸ் டைரி எங்கே? ஒன்னையும் விடக் கூடாது! நீதிபதி கண்டிஷன்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கில் எதையும் மறைக்கக் கூடாது எனவும், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்திய மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட இருப்பதால் 11ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டிய நீதிபதி கார்த்திகேயன், இரு நீதிபதிகளும் எந்த கருத்தில் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்யும்படி இருதரப்புக்கும் அறிவுறுத்தினார்.
இதற்காக வழக்கின் விசாரணையை நாளை தள்ளி வைத்த நீதிபதி, ஜூலை 8ம் தேதி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெறும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் நீதிபதி, செந்தில் பாலாஜி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை ஆவணங்களை (கேஸ் டைரியை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது. அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டென்ட் போதும்.. மக்களுக்கு கரன்ட் கொடுங்க.. செந்தில் பாலாஜி காட்டம்












Click it and Unblock the Notifications