அன்று கைதி.. இன்று அமைச்சர்! அமலாக்கத்துறை அலுவலகத்தில் கெத்தாக செந்தில் பாலாஜி! ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்?
சென்னை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது அவரது காரில் ஒரு முக்கியமான விஷயம் மிஸ் ஆகி இருந்தது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 471 நாட்கள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலமுறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும், சாட்சியங்களை கலைக்க கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
செந்தில் பாலஜி விடுதலையை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. சொன்னது போலவே அமைச்சரவை மாற்றம் குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. இதை அடுத்து ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அமலாக்க துறையால் தனது பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் வழக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
எந்த அமலாக்கத் துறையால் தனது பதவியை ராஜினாமா செய்தாரோ இன்று அதே அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சராக ஆஜராகி கையெழுத்திட்டார். அதே நேரத்தில் தனது சொந்த வாகனத்தில் தான் ஈடி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி இருந்தார். தமிழ்நாடு அரசு சின்னம், தேசியக் கொடி இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும், கட்சியினர் இல்லாமல் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த தகவல் கிடைத்ததும், அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அங்கு குவியத் தொடங்கினர். ஆனால் அமைச்சரைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் திமுகவினருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications