டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் சென்றுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (மார்ச் 15) மூன்றாவது முறையாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தவெக குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சூழலில் சிபிஐ சம்மன் அனுப்பியதன் பேரில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் செந்தில் பாலாஜி.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகிறார். டெல்லி சென்றுள்ள செந்தில் பாலாஜியுடன் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் சென்றுள்ளார். நாளை காலை சிபிஐ அதிகாரிகள் முன் செந்தில் பாலாஜி ஆஜராக இருக்கிறார்.
முன்னதாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி டெல்லி செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அங்கு எந்த விளம்பரமும் இல்லாமல் முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான். ஆனால் திமுக மருத்துவர் அணி என 10 ஆம்புலன்ஸ்களை எடுத்துக்கொண்டு வந்து செந்தில் பாலாஜி லைவ் கவரேஜ் செய்துகொண்டிருந்தார்.
விடிய விடிய போஸ்ட் மார்ட்டம் நடந்தது. ஆனால் விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை. இதையெல்லாம் பார்த்தால் நமக்கு சந்தேகம் வருமா இல்லையா? 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். சிபிஐ விசாரணைக்கு செல்வதால் கடந்த ஒரு வாரமாக அவர் மிகவும் பதற்றமாக இருக்கிறார். செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீது பாய்கிறார்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி!












Click it and Unblock the Notifications