திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைகிறார் என்று தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்னை: முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக இவர் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனால் செந்தில் பாலாஜி, தினகரன் இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

புகைப்படம் வெளியானது
இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளிய கின. டிச.8-ம் தேதி திமுகவில் இணைவார் என்று முதல்ல கூறப்பட்டது. அதோடு செந்தில்பாலாஜி திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

10 நாட்களாக தொடர்பில் இல்லை
இந்த தகவல்களை உறுதியாக்கும் வகையில் தினகரனுடன் செந்தில்பாலாஜி நீண்ட நாட்களாக பேசவில்லை என்று கூறப்பட்டது. 10 நாட்களாக செந்தில்பாலாஜியுடன் பேச முடியவில்லை என்று தினகரன் தரப்பே கூறியது. தினகரன் போன் செய்தாலும் யாரும் எடுக்கவில்லை என்று வெளிப்படையாக தகவல்கள் வந்தது.

அறிக்கை வெளியானது
இந்த நிலையில்தான் தினகரன் நேற்று செந்தில்பாலாஜிக்கு எதிராக அறிக்கைவிட்டார். செந்தில்பாலாஜியை தினகரன் நேரடியாக தாக்காமல் மறைமுகமாக தாக்கி இருந்தார். சிலர் சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக்கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப்போகிறார்கள் என்று செந்தில்பாலாஜி குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இன்று இணைந்தார்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்தார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும் அதிகமானோருடன் இன்று திமுகவில் இணைந்தனர். இதற்காக செந்தில் பாலாஜி அண்ணா அறிவாலயம் வந்தார். பின்னர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜிக்கு அண்ணா அறிவாலயத்தில் பலத்த வரவேற்பு அளித்தனர்.
இணைந்த பின்னர் திமுக உறுப்பினர் விண்ணப்ப பாரத்தை நிரப்பி அதை மு.க.ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்தார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications