நத்தையாரே!.. அதிமுகவில் மின்வெட்டை.. என்னை விட சூப்பராக விளக்கிய ராமதாஸ்.. 2015 பதிவை போட்ட செ.பா!
சென்னை: மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்த போது தமிழகத்தில் மின்வெட்டு எப்படி இருந்தது என்பதை என்னை விட கூட்டணிக் கட்சித் தலைவர் பாமக ராமதாஸ் அருமையாக விளக்கியுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்த பிறகு பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தன் பங்குக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்துள்ளார்.

நத்தம் விஸ்வநாதன்
அவர் கூறுகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், அந்தத் துறை அமைச்சராக உள்ளவருக்கு மின் துறை குறித்து புரிதல் இல்லாததுதான். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவது போல் பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்தான் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
|
ட்விட்டர் பக்கம்
இதற்கு செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மின்துறை அமைச்சராக திரு. நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது. இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், Google கூட விடை சொல்ல தவிக்கிறது.

மின்துறை புரிதல்
2006 - 2011 திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மின் திட்டங்களால் தான் நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் அதிமுக மின் மந்திரிகளின் மின்துறை புரிதல் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

மின்வெட்டு
விஸ்வநாதனின் கீழ் மின்வெட்டு எப்படி இருந்தது என்பதை என்னை விட, அவர்களது கூட்டணி கட்சித் தலைவர் அய்யா
@drramadoss அவர்கள் நன்றாகவே விளக்கியிருக்கிறார். மின்துறை பற்றி புரிதல் இருக்கட்டும், முதலில் நத்தையார் மின்துறை பற்றி அறிதல் வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications