நெளியும் திமுக.. செந்தில் பாலாஜி கேஸில் திடீர் திருப்பம்.. மறுபடியும் முதல்ல இருந்தா? அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மிகுந்த நெருக்கடியை அவருக்கு உண்டாக்கி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விவகாரங்கள் குறித்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

Senthil Balajis case: the supreme court will give its verdict today in the case of minister senthil balajis appeal

ஊழல் தடுப்பு: அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் சொன்னார்கள்.. இதையேற்று, செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து ஹைகோர்ட்டும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டானது, ஹைகோர்ட் உத்தரவை ரத்துசெய்ததுடன், மறுபடியும் முதல்ல இருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை: ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது... அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளிக்க போவதாக செய்திகள் வெளியாகின.

Senthil Balajis case: the supreme court will give its verdict today in the case of minister senthil balajis appeal

கடந்த சில மாதங்களாகவே விசாரணை செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்கு குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கர எதிர்பார்ப்பு: கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் தொடங்கியுள்ளது.. அத்துடன் இது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த ஹைகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம்கோர்ட் தற்போது உறுதி செய்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எந்த சிக்கலும் இல்லை.. ஆனால், பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது, அவருக்கான சிக்கலை அதிகப்படுத்தி உள்ளது.. நெருக்கடியை கூட்டி வருகிறது..
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டால் செந்தில் பாலாஜிக்கு எந்த சிக்கலும் அவருக்கு வராது என்று சொல்லப்பட்டது.. அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தால், செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொன்னார்கள்.. ஆனால், பண மோசடி வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணையை தொடர வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளது, மிகப்பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி உள்ளது.

அந்தவகையில், அமலாக்கத்துறையின் சம்மன், செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்டு, அவரிடம் விசாரணையை துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேபோல, திமுக அரசுக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு நெருடலை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+