"அந்த" பாராவை மட்டும் கையில் எழுதியது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கேள்வி.. அமலாக்கத்துறை ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு வழக்கு விசாரணையில் இன்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ முக்கியமான வாதம் ஒன்றை வைத்தார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிகர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைக்கிறார்.

அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி.எஸ் சட்டங்களில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அமலாக்கத்துறைக்கு நாடாளுமன்றம் அப்படி எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. நாடாளுமன்றமே வழங்காத ஒரு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது.சட்டவிரோத கைது என்பதை மனதில் கொள்ளாமல் முதன்மை அமர்வு நீதிபதி, நீதிமன்ற காவல் வழங்கியுள்ளார், என்று செந்தில் பாலாஜியின் மனைவிவியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் வைத்தார்.
இதையடுத்து ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் போது, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை ஏன் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை, காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசார்ணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர்.
கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை .காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் என்பதால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது .
சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும்.
முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. மேலும் , கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், நீதிமன்ற காவலில் வைக்கும் போது இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவு இல்லை என்று கூறினார்.
இதற்கு அமலாக்கத்துறை வைத்த பதில் வாதத்தில், கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இதுசம்பந்தமாக காலை 8:12 மணிக்கு தான் அனுப்பப்பட்டுள்ளது.
கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை என்றது.
என். ஆர் இளங்கோ பதில்: இதற்கு என் ஆர். இளங்கோ அளித்த பதிலில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை ஆவணத்தில், 13 பாராக்கள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் 14வது பாரா கையால் எழுதப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டதை அமைச்சரின் சகோதரர் அசோக்கிற்கு தெரிவித்தோம் என்பதை மட்டும் கடைசியில் கையில் எழுதி உள்ளனர். இது குழப்பமாக உள்ளது.
இதை ஏன் அவர்கள் முன்கூட்டியே டைப் செய்யவில்லை. அமைச்சர் மெமோவை பெற மறுத்ததையோ அல்லது கையெழுத்திடுவதையோ ஏன் பதிவு செய்யவில்லை? ஜூன் 14 அன்று காலை 8:12 மணிக்கு அமைச்சரின் சகோதரர், மனைவி மற்றும் பட்டயக் கணக்காளர் ஆகியோருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது, ஆனால் அதற்கு முன் இரவே 1:41 மணிக்கு தயாரிக்கப்பட்ட கைது குறிப்பில் இந்த விஷயத்தை இவர்கள் எப்படி எழுதினர்? இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினார்.
-
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications