செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அந்த பாயிண்டை சொன்னதும்.. "சரிதான்" சொன்ன நீதிபதி! அதிர்ந்த அமலாக்கத்துறை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு வழக்கு விசாரணையில் இன்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ முக்கியமான வாதம் ஒன்றை வைத்தார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைக்கிறார்.

அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.
கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. அதனால் இந்த ஆட்கொணர்வு மனு செல்லாது என்று வாதம் வைத்தார்.
இதை எதிர்த்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே. சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லையே. பின்னர் எப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதை பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.

அப்படி இருக்க இவர்கள் எதை வைத்து கஸ்டடி கேட்டனர். இந்த கைதில் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுங்கத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த பிரிவில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே.
ஆகவே இது சட்ட விரோதமான கைதுதான். 41 ஏ படி கைது செய்தால் கைது செய்யப்பட்ட நபரிடமும் குடும்பத்தினரிடமும் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது,. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று என். ஆர் இளங்கோ வாதம் வைத்துள்ளார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி சக்கரவர்த்தி, CrPCயின் 41A பிரிவைப் பின்பற்றி மட்டும்தான் கைது செய்ய வேண்டுமா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான காரணங்கள் இருப்பதாக அதிகாரி திருப்தி அடைந்தால், கைது செய்வதற்கு முன் சம்மன் அனுப்பாமல் கைது செய்யலாமா என்று கேட்டார்.
இதற்கு என். ஆர் இளங்கோ கூறிய பதிலில் தற்போதைய வழக்கில், கைது செய்வதற்கான முழுமையான காரணங்களை ED கூறவில்லை. கைது செய்வதற்கு முன் அமலாக்கத்துறை கண்டிப்பாக பிரிவு 41A ஐ பின்பற்ற வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி "ஆம், சரிதான்" என்றார். இதையடுத்து நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. நீதிபதிகள் தங்களுக்குள் இதையடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications