மத்த மதம் எல்லாம் எங்கே? சீறிய செந்தில் குமார் எம்பி.. "துணிச்சல்".. திரும்பி பார்த்த வடஇந்தியர்கள்!
சென்னை: திமுக எம்பி செந்தில் குமார் பற்ற வைத்த தீ வடஇந்தியா முழுக்க காட்டுத் தீ போன்ற விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசு விழாக்களில், எப்படி இந்து மத பூஜைகளை செய்ய முடியும் என்று செந்தில் குமார் எம்பி துணிச்சலாக எழுப்பிய கேள்விதான் இந்த விவாதத்தை வடஇந்தியாவில் எழுப்பி உள்ளது.
Recommended Video
திமுக எம்பி செந்தில் குமார் தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணிகளில் கலந்து கொண்டு, அதை தொடங்கி வைத்தார். இந்த பணிகளுக்கு முன்னதாக பூமி பூஜை போடும் ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கோபம் அடைந்த செந்தில் குமார் எம்பி.. ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இங்கு பூஜை செய்வது ஏன்? இது அரசு விழா தானே? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

கேள்வி
அரசு விழாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த பூஜைக்கு ஏற்பாடு செய்ய அனுமதி தந்தது யார்? இமாம் எங்கே? பாதிரியார் எங்கே? மதம் இல்லாதவர்கள் எங்கே? சொல்லுங்கள்.. அரசு விதியில் இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று இருக்கிறதே? அரசு நிகழ்ச்சிகளுக்கு என வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் இருக்கின்றன . அது பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்று செந்தில் குமார் எம்பி கேள்வி எழுப்பினார்.

வீடியோ
அதோடு இந்த வீடியோவை பகிர்ந்த செந்தில் குமார் எம்பி ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து இருந்தார். இந்த வீடியோதான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 246800 பேர் இதுவரை இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடைசியில் எம்பி ஒருவர் துணிச்சலாக இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் புகழந்து உள்ளனர்.

பாராட்டு
அதன்படி.. பல நாட்களாக இது போல இந்து பூஜைகள் அரசு விழாக்களில் நடக்கின்றன. அது தவறு. எல்லா மதத்தினரும் வரி கட்டுகிறார்கள். வரி பணத்தில் செய்யப்படும் அரசு நிகழ்ச்சிகளில் இந்து சடங்குகளை செய்வது சரியாக இருக்காது. இதே போல மற்ற எம்பிக்களும் செயல்பட வேண்டும். அப்போதுதான் மாற்றம் நிகழும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வடஇந்தியா
முக்கியமாக வடஇந்திய ஊடகங்கள் பல இதை செய்தி ஆக்கி உள்ளன. வடஇந்தியாவில் எம்பிக்கள் இப்படி செய்ய வாய்ப்பு குறைவு. சமீபத்தில் கூட பெரிய நிகழ்ச்சி ஒன்றில் இது போல இந்து மத பூஜைகள் நடத்தப்பட்டது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில்தான் செந்தில் குமார் எம்பியின் இந்த செயலை பல வடஇந்திய ஊடகங்கள் பகிர்ந்து உள்ளனர். அதற்கான எதிர்வினைகளையும் செய்திகளாக வெளியிட்டு உள்ளன.

திரும்பி பார்த்த வடஇந்தியர்கள்
அதேபோல் வடஇந்தியர்கள் பலரும் இதை பகிர்ந்து உள்ளனர். இந்தியா மதசார்பற்ற நாடு. இந்தியாவில் எல்லோரும் இதை பின்பற்ற வேண்டும். அரசு விழாக்களில் ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க கூடாது. எல்லா எம்எல்ஏ, எம்பிக்களும் இதை பின்பற்ற வேண்டும். செந்தில் குமார் எம்பி செய்தது போல செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமர்சனம்
அதே சமயம் செந்தில் குமார் எம்பிக்கு கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு உள்ளன. இது தேவையற்ற செயல். பல நாட்களாக இந்த வழக்கம் இருக்கிறது. சில அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களில் கூட இப்படி நடந்ததே. அதே ஏன் செந்தில் குமார் எம்பி தட்டி கேட்கவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும, இது தேவையற்ற செயல் என்று விமர்சனம் வைத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications