கொரோனா பாதிப்பு அதிகமுள்ள.. கோவை, திருப்பூர், ஈரோடுக்கு தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக சென்னையில் பாதிப்பு 3,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

Separate IAS officers have been posted in the three corona affected districts of Coimbatore, Tiruppur and Erode

ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. இன்று மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் கோவை முதலிடம் பெற்றது. இதே போல் கொங்கு மண்டல பகுதிகளான திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விடவும், தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தவும் கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் சித்திக் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுளளார். திருப்பூரில் சமயமூர்த்தி, ஈரோட்டில் செல்வராஜ் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோன தடுப்பு பணிகள், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+