Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது ஒரு தாய் பிள்ளையா? அப்புறம் எதுக்குங்க தனித்தனி கட்சி? டிடிவி தினகரனை நோக்கி எழும் கேள்விகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்றும் இல்லாத திருநாளாய் இன்று எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும்.. ஒன்றாக புன்னகையோடு செய்தியாளர்களை சந்தித்திருந்தனர். இதில் டிடிவி பேசிய விஷயங்கள்தான் ஹைலைட். நாங்கள் ஒரு தாய் பிள்ளை என்று கூறி, எடப்பாடி பழனிசாமியை பார்த்து சிரிக்க.. மறுபுறம் அமமுகவிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுக் கொண்டனர். இப்படி போனவர்களும்.. கட்சிக்குள் முணக்கிக்கொண்டிருப்பவர்களும் டிடிவியை பார்த்து சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் நேற்று இணைந்திருந்தார். அவரை கூட்டணிக்குள் வரவேற்பதாக கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி, வாழ்த்து அறிவிப்பில் கூட வார்த்தைகளை கவனமாக கையாண்டிருந்தார். இப்படி இருக்கையில் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றனர்.

TTV Dhinakaran AIADMK AMMK

டிடிவி தினகரன் பேசியது என்ன?

செய்தியாளர் சந்திப்பில், "இது எங்கள் குடும்ப பிரச்சனை, ஒரு தாய் மக்களின் பிரச்சனை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. ஆனால், அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்" என்று பேசியிருந்தார்.

டிடிவியின் சிரிப்பு

இதெயெல்லாம் கேட்கும்போது, குபு குபுவென சிரித்துக்கொண்டு.. சில நாட்களுக்கு முன்னர் பிரஸ் மீட்டில், "எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு.. அவருடன் கூட்டணி வைப்பதற்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம்" டிடிவி பேசியிருந்தது நினைவுக்கு வருவதாக அக்கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர். இதை மட்டுமா டிடிவி சொல்லியிருந்தார்?

துரோகி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியை பற்றி டிடிவி பேசுவது எனில், அவர் பயன்படுத்தும் வார்த்தை துரோகி என்பதுதான். பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் முதுகில் குத்திய வஞ்சகர் என்று விமர்சித்து வந்திருந்தார் டிடிவி. இதையெல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். டெல்லிக்கு அதிமுகவை அடக்கு வைத்தவர் எடப்பாடி என்று சொல்லிவிட்டு.. அதிமுக சுயமரியாதை கொண்ட கட்சி.. ஆனால் பாஜகவின் கிளை கட்சியாக எடப்பாடி மாற்றிவிட்டார் என்று கூறிவிட்டு.. இன்று மோடி, எடப்பாடியுடன் ஒரே மேடையில் டிடிவி நின்றுக்கொண்டிருந்ததுதான் ஹைலைட்.

எடப்பாடியின் வஞ்சகம்

அதேபோல கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர காரணமே அதிமுகதான் என்று பேசியிருந்தார். எடப்பாடியின் தவறான முடிவுக்கு காரணமும், முக்குலத்தோர் சமூகத்தை புறக்கணித்ததும்தான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று விளாசி தள்ளியிருந்தார். அப்படிப்பட்டவரா இன்றைக்கு எடப்பாடியுடன் சிரித்த முகத்துடன் பேட்டியளிக்கிறார்? என அமமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்

அதிருப்தியில் அமமுகவினர்

பாஜகவுடன் அமமுக கைகோர்ப்பது நேற்றே உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 3 பேர், முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இன்னும் பலர் கட்சி மாறலாம் என்றும், மீதம் இருப்பவர்கள் சைலன்ட் மோடுக்கு போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எடப்பாடிக்கு எதிராக டிடிவி வாக்கு வங்கியை கிரியேட் செய்து வைத்திருந்தார். இது சாதி ரீதியான ஓட்டு பேங்க். 2021ல் அதிமுக சில இடங்களில் தோற்றதற்கு காரணம் இதுதான். இப்படி இருக்கையில் திடீரென டிடிவி என்டிஎ-வில் இணைந்திருப்பது அமமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிம்பிளான கேள்வி

அமமுக நிர்வாகிகள் கேட்கும் கேள்வி ரொம்ப சிம்பிளானதுதான். நாங்கள் ஒரு தாய் பிள்ளை என்று கூறி, எடப்பாடி பழனிசாமியை பார்த்து டிடிவி சொல்வது உண்மையெனில்.. எதற்கு இரண்டு கட்சிகள்? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பேசாமல் அதிமுகவுடன் இணைத்து விட வேண்டியதுதானே! என்பதுதான் அந்த கேள்வி. இதற்கு பழைய புன்னகையோடு டிடிவி பதிலளிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+