உயிரை மாய்த்துக்கொண்ட சித்ரா.. சின்னத்திரையில் இதுவரை தற்கொலை செய்து கொண்ட நடிகர், நடிகைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா.இவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். இவரை போல் சின்னத்திரையில் இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாருகேஷ், நடிகை வைஷ்ணவி, ஸ்ராவனி, சபர்ணா, பிரதியுஷா, ஷோபனா, பாலாஜி யாதவ், முரளி மோகன் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.

சின்னத்திரையில் இதுவரை ஏராளமான நடிகர் நடிகைகள், பணப்பிரச்சனை, சீரியல் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களாலும், காதல் போன்ற விவகாரங்கள் காரணமாகும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மனஅழுத்தம் காரணமாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலையை நாடுவது மிகவும் தவறானது என்று உலகிற்கு உணர்த்த வேண்டிய நடிகர், நடிகைகளே தற்கொலைக்கு ஆளாகுவது பெரும் சோகமானது.

2 மாதங்களுக்கு முன்பே சித்ராவுடன் திருமணம் முடிந்துவிட்டது.. போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!

நடிகை வைஷ்ணவி

நடிகை வைஷ்ணவி

சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

முரளி மோகன்

முரளி மோகன்

வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பாலாஜி யாதவ்

பாலாஜி யாதவ்

அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

ஷோபனா

ஷோபனா

சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

பிரதியுஷா

பிரதியுஷா

ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஹிந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாய் பிரசாந்த் பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.

சபர்ணா

சபர்ணா

நடிகை சபர்ணா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து சீரியல்களில் நடித்த சபர்ணா ஒரு சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்தார். படிக்காதவன், காளை, பூஜை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ராவனி

ஸ்ராவனி

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவனி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்த அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தூக்கில் தொங்கினார். காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் ரெட்டி என்பவரும் டிக்டாக் மூலம் அறிமுகமாகி நெருக்கமாக பழகி வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் ஸ்ராவனி உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

சித்ரா

சித்ரா

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. சின்னத்திரை நடிகைகளிலேயே புகழ் பெற்றவர். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இவருக்கு அண்மையில் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் ஆனது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அருகே நசரத் பேட்டையில் ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது சக கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+