Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானிக்கு ஷாக்! ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டரை அதிரடியாக ரத்து செய்தது தமிழக மின்வாரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதலுக்காக கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை டான்ஜென்ட்கோ ரத்து செய்துள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து செய்வதாக டான்ஜென்ட்கோ கூறியுள்ளது.

தமிழகத்தில் இருக்கின்ற 3 கோடி மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்காக மத்திய அரசின் நிதி உதவியுடன் 19,000 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வீட்டில் நுகர்வோர்கள் பயன்படுத்த கூடிய மின்சாரத்தினை சரியான முறையில் கணக்கிடவும், வீட்டுக்கு வந்து கணக்கெடுக்காமல் அலுவலகத்தில் இருந்தபடியே துல்லியமாக கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது.

tamil nadu electricity board

இந்த திட்டத்துக்கு பல ஆண்டுகளாக டெண்டர் விடப்படும் பணிகள் நடந்தது. பல முறை இதற்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தது. அதானி நிறுவனம் தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+