பெங்களூர் டூ சென்னை எஸ்இடிசி பஸ்.. நள்ளிரவில் கேரள பெண்ணுக்கு நடந்த சம்பவம்.. பரபரப்பு புகார்
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எஸ்இடிசி பஸ்சில் சென்ற கேரள பெண் பயணி தன்னை நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக எஸ்இடிசி அதிகாரி கூறுகையில், விசாரணைக்கு பிறகு பேருந்தின் கண்டக்டர் மற்றும் நடத்துனருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தொலை தூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூர், கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் எஸ்.இ.டி.சி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளில் வெளி மாநில பயணிகளும் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண் பயணியை நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எஸ்.இ.டி.சி பேருந்தின் நடத்துநர் இறக்கிவிட்டு சென்றதாக அப்பெண் பயணி புகாரளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை ஸ்ரீபெரும்பதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் தமிழக அரசின் விரைவு பேருந்தில் பயணம் செய்துள்ளார். ரூ. 420 கட்டணத்திற்கு 500 கொடுத்ததாகவும் மீதி சில்லறை கொடுப்பதில் பெண் பயணிக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பெண் பயணியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்ட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இரவு நேரம் இந்த இடம் பாதுகாப்பானது இல்லை எனவும் கல்லூரி அருகே இறக்கி விடுமாறு பெண் பயணி கேட்ட போதும், வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டு சென்றாராம் நடத்துநர்.
எஸ்.இ.டி.சி நிர்வாகத்திடம் தான் புகாரளிப்பேன் எனக்கூறியும் முடிந்ததை செய்யுங்கள் எனக் கூறிவிட்டு நடத்துநர் சென்றதாக பெண் பயணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணையை தொடங்குவதாக கூறியுள்ள எஸ்.இ.டி.சி, விசாரணைக்கு பிறகு பேருந்தின் கண்டக்டர் மற்றும் நடத்துனருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாளர் ஆர். மோகன் கூறுகையில், "தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இரவு நேரத்தில் செல்லும் பேருந்துகளும் பயணிகளை அவர்கள் கேட்கும் இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. தவறு இருக்கும் பட்சத்தில் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லறை பிரச்சினையை தவிர்க்க யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்த பயணிகளை அறிவுறுத்துகிறோம்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications