செட்டில்மென்ட் பத்திரம்.. திடீர் திடீர்னு ஏறிய கட்டணம்.. வருவாய் குறைவு? பதிவுத்துறை முக்கிய முடிவு?
சென்னை: பத்திரப்பதிவு கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள் அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன.. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்பட பல்வேறு தொழில் சம்பந்தமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
வருமானம் குறைவு: ஆனால், வருடத்துக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ஆவணங்கள் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. காரணம், 3 வருடங்களுக்கு முன்பு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்திரப்பதிவுகள் குறைந்துவிட்டன. இதனால், வருமானமும் வெகுவாக குறைந்துவிட்டது..

இதையடுத்து, கடந்த வருடம் அதாவது 2022-ல் பத்திரப்பதிவு துறை நிகழ்த்தியிருந்தது. 2020-21ம் ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.10,643 கோடி மட்டுமே வருவாய் கிடைத்திருந்தது.. ஆனால், கடந்த 2021-22ம் ஆண்டில், திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
பத்திரப்பதிவு: குறிப்பாக, பத்திரம் பதிவு செய்த அன்றே பத்திரங்கள் திருப்பி தரப்பட வேண்டும், நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைப்பு உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் நடவடிக்கைள் பதிவுத்துறை ஐஜி சிவன் அருளால் எடுக்கப்பட்டது.
இதையடுத்து, கூடுதல் வருவாயும் கிடைத்தது.. அதாவது, கடந்த 2021-22ம் நிதியாண்டின் ஜூலை வரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 539,06 கோடியாக உயர்ந்தது.. பத்திரப்பதிவு துறையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதையடுத்து, இந்த 2023 - 24 நிதியாண்டுக்குள், 20,000 கோடி வருவாய் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இந்த இலக்கையும் எட்டிப்பிடித்துவிட பத்திரப்பதிவு துறை மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
வருவாய் லாபம்: ஆனால், இந்த கடந்த ஏப்ரல் முதல் ஜூலை இறுதி வரையிலான, 4 மாத காலத்தில், வெறும் 5,611 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறதாம். 4 மாத இலக்கில், இந்த 1,053 கோடி ரூபாய் என்பது மிகவும் குறைவாகும். பல்வேறு பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டும்கூட, எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, 7 மாதங்களில், 11,662 கோடி ரூபாய் வசூலாகி இருக்க வேண்டுமாம்.. ஆனால், 9,000 கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை என்கிறார்கள்.. இதற்கு காரணம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவுக்கான கட்டணங்களையும், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளையும் அடுத்தடுத்து உயர்த்தியதுதான் என்கிறார்கள்.
திடீர் சரிவு: இப்போதைக்கு 11,000 கோடி ரூபாய் வசூலானால்தான், வருவாய் இலக்கை எட்ட முடியும் என்பதால், அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து, பதிவுத்துறை நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாம்.
பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை என்பதால்தான், சமீபத்தில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.
தளர்வு வருமா?: இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றே கருதப்பட்டது என்றாலும், பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்களில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளதால், பதிவுத்துறை இதை பரிசீலிக்கும் என்றே நம்பப்படுகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications