நாகர்கோவில் ரயில் ரத்து..செங்கல்பட்டு போகும் வைகை, ராக்போர்ட்! பயணிகளே நோட் பண்ணுங்க மேஜர் அறிவிப்பு
சென்னை: தாம்பரம் ரயில் நிலைய யார்ட் சீரமைப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - அந்தியோதியா முன்பதிவில்லா விரைவு ரயில் சில நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் செங்கல்பட்டில் இருந்து கிளம்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி எந்தெந்த தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினசரி 10 க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்துதான் கிளம்புகின்றன. மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதுவதை காண முடியும்.

நகரின் மையப்பகுதியில் இருப்பதால் எழும்பூர் மக்களுக்கு வந்து செல்ல மிகவும் வசதியான இடமாக உள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலைய யார்டு மறுசீரமைப்பு பணி காரணமாக வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு வார காலத்திற்கு எழும்பூரில் இருந்து கிளம்பாது எனவும் செங்கல்பட்டில் இருந்து மட்டுமே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தாம்பரம் ரயில் நிலையத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை யார்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* தாம்பரம் - நாகர்கோவில்அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 20691) வரும் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (20692) வரும் 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) வரும் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
* இந்த ரயில் சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* இதேபோன்று காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (12606) வரும் 23 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
* இந்த பல்லவன் ரயில் செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22153) வரும் 23 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்ஃபோட் எக்ஸ்பிரஸ் ரயில் (12653) வரும் 24 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
* தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (20684) 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் விழுப்புரம் - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* இதேபோன்று மறு மார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (20683) 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.
* ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் (12760) வரும் 22 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை சென்னை கடற்கரைக்கு செல்லும்.
* இதே போல, மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) வரும் 22 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
* தாம்பரத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஜசிதிஹ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12375) வரும் 27 ஆம் தேதி மட்டும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரயில் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications