ரவீந்திரநாத், தங்கதமிழ்ச் செல்வன், ஈவிகேஎஸ் என மும்முனை போட்டி.. ஸ்டார் தொகுதியானது தேனி
Recommended Video

சென்னை: தேனியில் ரவீந்திரநாத், தங்கதமிழ்ச்செல்வன், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுவதால் அத்தொகுதி ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியானது சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயகனூர், கம்பம் ஆகிய பசுமையான தொகுதிகளை உள்ளடக்கியது.
தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 1952-ஆம் முதல் தொடர்ந்து 3 தடவை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. அதன்பின்னர் அதிமுக 7 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றது. திமுக இரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பிரபலம்
இந்த தொகுதியின் எம்பியாக ஜெயலலிதாவால் டிடிவி தினகரன் நிறுத்தப்பட்டார். இவர் 1999-ஆம் ஆண்டு அத்தொகுதி எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின்னர் அந்த தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் அந்தளவுக்கு பிரபலமானவர்கள் இல்லை.

மும்முனை போட்டி
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என மும்முனை போட்டி நிலவுகிறது.

தனது மகனுக்கு சீட்
சுருக்கமாக சொல்ல போனால் அந்த தொகுதி ஸ்டார் தொகுதியாகிவிட்டது. நிச்சயம் இந்த தொகுதியின் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. அதிமுகவை பொருத்தமட்டில் எப்படியோ தனது மகனுக்கு சீட் வாங்கிவிட்டார் ஓபிஎஸ்.

பெரும் எதிர்பார்ப்பு
தேனி லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளது. இன்னும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் தேர்தல் களை கட்ட தொடங்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.












Click it and Unblock the Notifications