விபச்சாரத்துக்கு செல்பவர் கஸ்டமர் கிடையாது.. பாலியல் தொழிலாளி "பொருள்"? நறுக்னு கேட்ட நீதிபதி அருண்
சென்னை: பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல, பாலியல் தொழிலாளியை "ஒரு பொருளாக இழிவுபடுத்த முடியாது" என்றும் கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் கேரளாவில் பெற்று வருகிறது. என்ன நடந்தது?
கடந்த 2021ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி, பேரூர்கடா போலீசார், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.. அங்கு பாலியல் தொழிலாளியுடன் நபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார்.

பாலியல் தொழிலாளி சேவை
இதுதொடர்பான வழக்கும் பதிவானது.. ஆனால், போலீஸ் ரெயிடின்போது சிக்கியவர், அந்த பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளராக சென்றேன்.. பாலியல் தொழிலாளர்களை வாங்கவோ அல்லது தூண்டவோ இல்லை, ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையை மட்டுமே பெறும் ஒரு கஸ்டமர் நான்.. இதில் சட்டரீதியான தவறு இல்லை, தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று முறையிட்டார்.
ஆனால், இந்த வாதத்தை நீதிபதி வி.ஜி. அருண் அமர்வானது நிராகரித்தது.. இதுகுறித்து அமர்வு சொல்லும்போது, "விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்திய ஒருவரை கஸ்டமர் என்று சொல்ல முடியாது..
கஸ்டமர் என்றால் இப்படியா
ஒரு கஸ்டமர் என்றால், சில பொருட்கள் அல்லது சேவைகளை வாங்க வேண்டும். அதற்காக ஒரு பாலியல் தொழிலாளியை ஒரு பொருளாக இழிவுபடுத்த முடியாது. ஒரு பொருளாக அவர்களை கொச்சைப்படுத்தவும் முடியாது. பாலியல் தொழிலை தூண்டுபவரை வாடிக்கையாளராக கருதினால் பாலியல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் மனித கடத்தல் மூலம் வர்த்தகத்தில் ஈர்க்கப்பட்டு, மற்றவர்களின் சரீர இன்பத்தை திருப்திப்படுத்த தங்கள் உடலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
விபச்சார விடுதி பராமரிப்பாளர்
உண்மையில், இன்பம் தேடுபவர் பணம் செலுத்தலாம், அதில் பெரும்பகுதி விபச்சார விடுதியின் பராமரிப்பாளருக்கு செல்கிறது. எனவே, இந்த ஊதியம் பாலியல் தொழிலாளி தனது உடலை வழங்கவும், பணம் செலுத்துபவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படவும் தூண்டுதலாக மட்டுமே கருதப்பட முடியும்.
எனவே ஒரு விபச்சார விடுதியில் ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெறும் ஒருவர் உண்மையில் பணம் செலுத்துவதன் மூலம் அந்த பாலியல் தொழிலாளியை விபச்சாரத்தில் ஈடுபட தூண்டுகிறார். பாலியல் தொழிலாளியிடம் சென்றவர் மீது வழக்குப் பதிவு செய்ததை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது..
விபச்சாரத்தை தூண்டுதல்
மனுதாரருக்கு எதிரான வழக்குகளை, சட்டத்தின் பிரிவு 3 (விபச்சார விடுதி வைத்தல் அல்லது நிர்வகித்தல்) மற்றும் பிரிவு 4 (விபச்சாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழும் நபர்கள்) ஆகியவற்றின் கீழ் நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இருந்தாலும், சட்டத்தின் பிரிவுகள் 5(1)(d) (ஒரு நபரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் அல்லது தூண்டுதல்) மற்றும் 7 (பொது இடத்தில் அல்லது அதற்கு அருகில் விபச்சாரம் செய்தல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு தொடர வேண்டும்" என்று நீதிபதி அருண் தீர்ப்பளித்தார்.
பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்ற ஒருவர் மீது விபச்சாரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரலாம் என்று கேரள ஹைகோர்ட் அளித்துள்ள இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications