யாகவா முனிவரிடம் அடிவாங்கினாரே.. சிவசங்கர் பாபா ஞாபகம் இருக்கா.. சிக்கியது "வீடியோ".. அதிரடி விசாரணை
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் குறித்த விசாரணை ஆரம்பமாகிறது
சென்னை: யாகவா முனிவரிடம் அடிவாங்கினாரே சிவசங்கர் பாபாவை நினைவிருக்கிறதா.. அவர் மீது பரபரப்பு பாலியல் புகார் கிளம்பியதை அடுத்து, போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 25 வருடங்கள் இருக்கும்.. அப்போது ஒரு டிவி நிகழ்ச்சியில், யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் கலந்து கொண்டு விவாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது..
இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை சொல்லி கொண்டனர்.. இதில் ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்த யாகவா முனிவர், பிராடு என்று சொல்லி, சிவசங்கரை சரமாரியாக அடித்துவிட்டார்.. இது அத்தனையும் அப்படியே டிவியில் ஒளிபரப்பாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பக்தர்கள்
இந்த ஷோவை மையமாக வைத்து, விவேக் படத்தில் ஒரு காமெடிகூட இடம்பெற்றது. அன்னைக்கு யாகவா முனிவரிடம் அடிவாங்கிய இந்த சிவசங்கர்பாபா, தன் பக்த கோடிகளை கவரும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டார்.. இவர் டான்ஸ் ஆடிக் கொண்டே பக்தர்களிடம் பேசுவார்.. அதனால்தான் இவர் ஃபேமஸ் ஆனார்.

கடவுளின் அவதாரம்
தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லி கொள்வார்.. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சொந்தமாக ஒரு நகரை உருவாக்கினார்.. அதற்கு ராமராஜ்ஜியம் என்று பெயரையும் வைத்தார்.. அதற்கான இடத்தை தானமாக தந்தவரின் பெயரையும், தன்னுடைய அவதாரத்தின் பெயரையும் இணைத்து சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நடத்தி வருகிறார்.

டான்ஸ்
இங்கு வரும் பெண் பக்தர்களை எல்லாம், கோபியர்கள் என்று சொல்வார்.. அவர்களை பார்த்ததும், இன்னும் குஷியில் உற்சாகமாக டான்ஸ் ஆடுவார்.. அதேசமயம், தன் பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவிகளைகூட விட்டுவைக்க மாட்டாராம்.. 5 முதல் 12-,ம் வகுப்பு படிக்கும் பல மாணவிகளிடம் அத்துமீறியுள்ளார்.. இது பலகாலமாகவே நடந்து வந்திருக்கிறது போலும்.. ஆனால், இப்போதுதான் இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளே பரபரப்பு குற்றச்சாட்டு சொல்லி உள்ளதால், இந்த விவகாரம் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது.

விசாரணை
சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...பள்ளி சிறுமிகளிடம் தான் கடவுளின் அவதாரம் என்று கூறி மூளைச்சலவை செய்து அவர்களிடம் எல்லை மீறியுள்ளதாக தெரிகிறது. அவர்களுடன் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு எங்காவது சென்றால்கூட, யாராவது ஒரு சிறுமியை தன்னுடன் அழைத்து செல்வாராம்.. இது தொடர்பான வீடியோவும் சிக்கி உள்ளதாம்.

ஆணையம்
தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், அந்த பள்ளியில் சோதனை நடத்த சென்றுள்ளனர்.. ஆனால், பாபா அங்கு இல்லையாம்.. தொடர்ந்து, இது குறித்து குழந்தைகள் நல ஆணையம் தற்போது விசாரணை செய்து வருகிறது... அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்தனியாக விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..

வேதனை
பள்ளி ஆசிரியர்கள்தான் இப்படி கைதாகி கொண்டிருக்கிறார்கள் என்றால், கடவுளின் அவதாரம் என்று தன்னை தானே பல வருஷமாக சொல்லிக் கொண்ட ஆசிரம சாமியாரும், கைதாகும் சூழல் உருவாகி உள்ளதை என்னவென்று சொல்வது?!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications