"பிராமின் என்பதற்காக நான் வெட்கப்படல".. டிவிட்டர் ஸ்பேஸ் விவாதத்தில்.. கொந்தளித்த மதுவந்தி!
பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் நடவடிக்கை கோருகிறார்கள்
சென்னை: "பிராமின்களையும் இந்துக்களையும் தொடர்ந்து தாக்கி பேசுவதை என்னால் பொறுத்து கொண்டிருக்க முடியாது" என்று மதுவந்தி கடுமையாக பேசியுள்ளார். அதேசமயம், டிவிட்டரில் இதுதொடர்பான விவாதங்கள் வெடித்துள்ளன.
Recommended Video
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடந்த சம்பவம், நேற்று முதல் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.. பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர்..
இந்த பள்ளியில் டிரஸ்ட்டியாக இருப்பவர் மதுவந்தி என்பது பல காலமாகவே தமிழகம் அறிந்த ஒன்று.. ஆனால், நேற்றைய தினம், தான் அந்த பள்ளியில் டிரஸ்ட்டி இல்லை என்று சொல்லி நழுவும்படியான விளக்கத்தை தந்தார். இது பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மேலும் ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.

உறுப்பினர்
மதுவந்தி தந்த விளக்கத்தில்,"நான் அந்த ஸ்கூலின் டிரஸ்ட்டி இல்லை.. ஒரு உறுப்பினர்தான்.. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை... இந்த பள்ளியின் மாணவியாக இருக்கவோ, கல்வியாளராக இருக்கவோ எனக்கொன்றும் அசிங்கம் இல்லை.. நான் படிச்ச ஸ்கூலில் உள்ள டீச்சர் இப்படி செய்துள்ளது அசிங்கமா இருக்கு.. மத்தபடி, இந்து என்பதிலோ, பிராமின் என்பதிலோ, எந்தவித அவமானமும் எனக்கு இல்லை.. அதேசமயம், இந்துக்களையும், பிராமின்களையும் தாக்கி பேசுவதையும் பொறுத்து கொண்டிருக்க முடியாது" என்றார்.

விவாதம்
இந்த நிலையில் அர்ஜூன் சம்பத் பங்கேற்ற டிவிட்டர் ஸ்பேஸ் விவாதம் ஒன்றில் மது வந்தியும் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட சிலருக்கும், அவருக்கும் இடையே கடும் விவாதம் மூண்டது.

மதுவந்தி
ஒரு பெண்மணி கோபமாக, "மதுவந்தி மேடம்.. உங்க பேரை சொல்லவே கூச்சமா இருக்கு.. ஒரு டீச்சர் இப்படி எல்லாம் பண்ணி வெச்சிருக்கார்.. அதையெல்லாம் கேட்கிறதை விட்டுட்டு, இங்கே வந்து உட்கார்ந்து பள்ளி நிறுவனங்களை தாக்கி பேசுகிறார்கள் என்று சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லை?" என்று கேள்வி எழுப்புகிறார்.

பழைய மாணவி
மதுவந்தி கூறுகையில், நான் முதலில் டிரஸ்டி இல்லை. அது தவறான தகவல். நான் அந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவி.. சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். நான் இந்த விவகாரம் தொடர்பாக வெட்கப்படுகிறேன். நான் படித்த பள்ளியின் பெயர் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப்படுகிறேன். ஆனால் "இந்து, பிராமின்" என்று குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படுவதை நான் விரும்பவில்லை, வெறுக்கிறேன். ஒரு இந்துவாக, பிராமினாக இருப்பதற்கு நான் வெட்கப்படவில்லை" என்று பதிலளித்துள்ளார் மதுவந்தி.
இந்த கடும் வாக்குவாதம்தான் இப்போது டிவிட்டரில் டிரண்ட் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications