2 மகள்கள் குளிப்பதை.. எட்டி பார்த்த ஏழுமலை.. கொந்தளித்த சீனிவாசன்.. 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 மகள்களும் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்களாம்.. அவர்களைதான் ஏழுமலை என்பவர் எட்டி பார்த்துள்ளார்.. இப்போது 5 பேர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளனர்.

4 நாளைக்கு முன்பு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது... ஸ்ரீபெரும்புதூரில் ராஜன் என்ற 34 வயது நபர் வீட்டில் 2 பெண்கள் தங்கியிருக்கிறார்கள்..

Sexual torture and man arrested in Chennai

அவர்கள் 2 பேரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்... இந்த வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் உள்ளது.

அந்த 2 பெண்களும் குளிக்கும்போது பாத்ரூமில், ராஜன் செல்போன் வீடியோவை ஆன் செய்துவிட்டு வந்துவிடுவாராம்.. கடைடசியில் இந்த விஷயம் வெளியே தெரிந்து, இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் சேலையூரில் நடந்துள்ளது..சீனிவாசன் என்பவர் ஒரு கார்ப்பென்டர். இவருக்கு 2 மகள்கள்.. இவர்கள் வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கும்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலை எட்டி பார்த்துள்ளார்.. ஏழுமலைக்கு இன்னொரு பெயர் மன்னாரு... 42 வயசாகிறதாம்.

மகள்கள் குளிப்பதை ஏழுமலை பார்க்கும் விஷயம் சீனிவாசனுக்கு தெரிந்துள்ளது.. அதனால் அவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.. இது தகராறாக உருவெடுத்துள்ளது.. ஏழுமலைக்கு அவரது மனைவி லட்சுமிதான் ஃபுல் சப்போர்ட்.. அதனால் சீனிவாசனிடம் சென்று, தன் புருஷனை எப்படி அடிக்கலாம் என்று நியாயம் கேட்டுள்ளார். லட்சுமியுடன் அவரது மகன் சதீஷ், மாமியார், தங்கை, தங்கை மகள் என 4 பேரும் திரண்டு சென்றனர். இதுவும் தகராறாக உருவெடுத்தது..

ஒருகட்டத்தில் டென்ஷன் அடைந்துவிட்ட, சீனிவாசன், வீட்டுக்குள் சென்று சிறிய கத்தியை எடுத்து வந்து லட்சுமி, மாமியார் ராஜேஸ்வரி, தங்கை தனபாக்கியம், மகன் சதீஷ், சந்தியா ஆகியோரை கை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டார். இதில் 5 பேருமே அலறி துடித்தனர்.. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 5 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.. இப்போது சீனிவாசன் கைதாகி உள்ளார்.. அந்த 5 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+