"ராஜாவே ஒன்ன காணாத நெஞ்சு".. பேக்கிரவுண்ட் பாட்டு.. விஜயகாந்த் போட்டோவுடன் உருகிய சண்முகபாண்டியன்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அவரது தந்தை குறித்து உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
கேப்டன், கருப்பு எம்ஜிஆர், கருப்பு நிலா, வள்ளல், கருணையுள்ளம் என பட்டப்பெயர்களை விஜயகாந்துக்கு அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நல்ல மனிதர், மார்கழி மாதத்தில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்றார்.

தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினார்கள் என பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தந்தையின் இறப்பால் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் மனம் உடைந்து அழுதனர். தந்தையின் இறப்பில் தொடங்கிய அழுகை இறுதி சடங்கையும் தாண்டி நீடித்தது.
தந்தை விஜயகாந்த் மகன்கள் மீது அதிக பாசம் கொண்டவர். என்னதான் பிசிஸாக ஷூட்டிங்கில் இருந்தாலும் வீட்டில் இருந்தால் மகன்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார். அந்த வகையில் சண்முக பாண்டியன் தனது தந்தை குறித்து உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் தனது தந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் எழுதியிருப்பதாவது: எனது தந்தை இறப்பிற்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது தந்தையின் இறுதி ஊர்வலம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நோக்கி வந்த போது சாலைகள், பாலங்கள் மீது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆதரவு என் அப்பா எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார், எத்தனை அன்புகளை சம்பாதித்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அப்பாவின் இந்த பேரழிப்பிலிருந்து மீண்டு வர உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இதமாக உள்ளது. என் அப்பா, நம் கேப்டனின் ஆன்மா சாந்தியடையட்டும் என சண்முகபாண்டியன் குறிப்பிட்டுள்ளார். அதில் அழும் எமோஜியை போட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications