Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சண்முகம் உதவியாளரே இல்லை.. ஒரே போடாக போட்ட செந்தில் பாலாஜியின் வக்கீல்! ஆரம்பம் முதலே பெயர் அடிபடுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளில் ஆரம்பம் முதலே சண்முகம் என்ற பெயர் அடிபட்டு வரும் நிலையில், இன்று ஐகோர்ட்டில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், சண்முகம் உதவியாளரே அல்ல எனக் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பு வலுவான வாதங்களை எடுத்து வைத்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறையின் முந்தைய வாதங்களை உடைக்கும் வகையில் தனது வாதத்தை எடுத்து வைத்தார். மேலும், டிஜிட்டல் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை மீது சுமத்தியுள்ளார்.

Shanmugam is not an aide of Senthil balaji: key argument in high court

சண்முகம் உதவியாளரே அல்ல - பரபரத்த வாதங்கள்: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து தனது வாதங்களுக்கு வலு சேர்த்தார் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம். அப்படி ஒரு வாதம் தான், வேலை தருவதாகக் கூறி பணம் வசூலித்த சண்முகம் என்பவர், செந்தில் பாலாஜியின் உதவியாளரே அல்ல என்று வாதத்தை வைத்துள்ளார் ஆர்யமா சுந்தரம்.

கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்கத்துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என இன்று வாதம் வைத்துள்ளார் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம்.

பேலன்ஸ் ஷீட்: மேலும், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது என்றும், பேங்க் பேலன்ஸ் ஷீட்டை வைத்தும் வாதங்களை வைத்துள்ளார்.

உதவியாளர் சண்முகம்?: செந்தில் பாலாஜியின் தனி உதவியாளர் சண்முகம், பல லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சண்முகம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்தாவதற்கு காரணமாக இருந்தார். இந்நிலையில், சண்முகம் உதவியாளரே இல்லை என்று இன்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அந்த சண்முகம் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வழக்கு பின்னணி: செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015 காலகட்ட அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக், உள்ளிட்டோர் மீது போலீசார் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, பலர் செந்தில் பாலாஜி மீது பணம் வாங்கிக்கொண்டு வேலை தரவில்லை என புகார் அளித்தனர். 2018 ஆகஸ்ட்டில் அருள் மணி என்பவர், தான் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் ரூ.40 லட்சம் கொடுத்ததாகவும், அரசு வேலை நியமன ஆணை தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் என்றும் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில் பாலாஜி, உதவியாளர் சண்முகம் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது மோசடி நடைபெற்ற காலகட்டங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், பணம் பெற்றதற்கான விவரப் பட்டியல் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

ஐகோர்ட்டில் ரத்தான வழக்கு: இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் தனி உதவியாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், இருதரப்பும் சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது எனக் கூறி மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

அமலாக்கத்துறை vs செந்தில் பாலாஜி: இதையடுத்து, லஞ்சம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்தே, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரெய்டு நடத்தப்பட்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது முதல் கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+