சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவு - இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்
சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் கியர்மேன் சுப்ரமணியம் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவை சிங்கநல்லூரில் உள்ள சாந்தி கியர்ஸ் உரிமையாளரும் சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனருமான சுப்ரமணியம் இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கியர்மேன் சுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் இறுதி வரை தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்,தன்னலமற்ற சேவகர் 'சாந்தி சமூக அறக்கட்டளை' நிறுவனர் திரு.சுப்பிரமணியன். அண்ணாரின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.(1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 11, 2020
கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் இறுதி வரை தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்,தன்னலமற்ற சேவகர் 'சாந்தி சமூக அறக்கட்டளை' நிறுவனர் திரு.சுப்பிரமணியன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணாரின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.(2/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 11, 2020
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
சமூக நலப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான சமூக சேவகர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவு பேரிழப்பு!#Shanthigears #RIPSubramanyam #ShanthiSocialService pic.twitter.com/Ris5t26UtW
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2020
சமூக நலப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான சமூக சேவகர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications