தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு .. துக்ளக் விழாவில் மோடி அரசை கேள்வி கேட்ட சசி தரூர்
சென்னை: தற்போதைய நிதிப் பகிர்வு கொள்கையில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார். திட்டமிட்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கும் தென்மாநிலங்கள் சம்பாதிப்பதையெல்லாம் ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கு தூக்கி கொடுக்கிறார்கள் என்றும் சராமரியாக புகார் பட்டியல் வாசித்துள்ளார் சசி தரூர்.
துக்ளக் இதழின் 54ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சசி தரூர், மத்திய அரசின் பாரபட்சமான நிதிப்பகிர்வு கொள்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

துக்ளக் விழா மேடையில் பாஜக ஆட்சி குறித்தும், மாலத்தீவு இந்தியா இடையேயான பிரச்சினை ராஜ தந்திர செயல்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார் சசி தரூர். வழக்கமாக துக்ளக் விழா மேடையில் பாஜக ஆதரவாளர்களுக்குத்தான் அழைப்பு விடுக்கப்படும். இந்த முறை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேசுவதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவரது பேச்சில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது.
தற்போதைய நிதிப் பகிர்வு கொள்கையில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. திட்டமிட்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கும்
தென்மாநிலங்கள் சம்பாதிப்பதையெல்லாம் ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கு தூக்கி கொடுக்கிறார்கள்.
தென்மாநிலங்கள் சுகாதாரத்தை மேம்படுத்தினால் அம்மாநிலங்களின் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றிய அரசால் குறைக்கப்படுகிறது. தென்மாநிலங்கள் கல்வியை மேம்படுத்தினால் அம்மாநிலங்களின் கல்விக்கான
நிதி ஒதுக்கீடு மத்திய அரசால் குறைக்கப்படுகிறது.
உங்களது தமிழ்நாடு எனது கேரளா போன்ற மாநிலங்கள் பாரபட்ச நிதிப் பகிர்வு கொள்கையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன
உத்தரபிரதேச மாநிலம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அவர்களுக்கு 1.79 ரூபாயை மத்திய அரசு திரும்பக் கொடுக்கிறது.
ஆனால், கர்நாடகா மாநிலம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அவர்களுக்கு வெறும் 47 பைசாவை மத்திய அரசு திரும்பக் கொடுக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வெறும் 29 பைசாவை மத்திய அரசு திரும்பக் கொடுக்கிறது என்னே ஒரு பாரபட்சம்...!
வளர்ச்சிக்காக உழைக்கும் எங்களுக்கு இதுதான் பரிசா? என்று கர்நாடகா முதல்வர் சீதாராமையா கேட்பது நியாயமான கேள்வி.
ஏன் இந்த பாரபட்சம்? கர்நாடகா மாநில வளர்ச்சிக்கான 72 சதவீத செலவினங்களை கர்நாடகா அரசு தனது நிதியில் மேற்கொள்கிறது.
ஆனால் பீகார் மாநில வளர்ச்சிக்கான 23 சதவீத செலவினங்களை மட்டுமே பீகார் மாநில அரசு தனது நிதியில் மேற்கொள்கிறது.
பீகாரின் மீதி 77 சதவீத செலவினங்களுக்கு மத்திய அரசே நிதியை வாரி வழங்குகிறது. ஏன் இந்த பாரபட்சம்.
உலகம் முழுவதும் உள்ள கூட்டாட்சி தத்துவம் என்பது உழைத்து முன்னேறும் மாநிலங்களுக்கு பரிசு தந்து ஊக்குவிப்பது என்பதுதான். ஆனால் மத்திய பா.ஜ.க ஆட்சியில் மட்டும்தான் திட்டமிட்டு உழைத்து முன்னேறும் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன.
மக்கள் தொகையை மட்டும் பெருக்கும் வட மாநிலங்களுக்கு தென்மாநில மக்களின் வரிப்பணம் வாரி வழங்கப்படுகிறது
லோக்சபா தொகுதிகளை வரையறுத்த பிறகு, அனைத்து தென் மாநிலங்களையும் விட, உத்தரபிரதேசத்தில் அதிக எம்.பி.,க்கள் இருப்பர் என, தரூர் கூறினார். இந்தி பேசும் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கூட்டினால், இந்தியைத் தேசிய மொழியாக்கும் சட்டத்தை இயற்றுவதை எது தடுக்கும்,.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து பேசிய சசி தரூர், கோயில் முழுமையடையாத நிலையில் அதை திறப்பதில் அர்த்தமில்லை. நான்கு சங்கராச்சாரியார்களும் இது முழுமையடையாத கோயில் என்று கூறுகின்றனர். கோவிலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும், பிராண பிரதிஷ்டை ஒரு அரசியல் தலைவரால் செய்ய முடியாது, ஒரு மதத் தலைவரால் மட்டுமே செய்ய முடியாது. ஒரு இந்து என்ற முறையில் இந்த வாதத்தை நான் உறுதியாக கூறுகிறேன் என்றும் சசி தரூர் கூறியுள்ளார்.
மாலத்தீவு சீனாவுக்கு அருகாமையில் இருப்பதைப் பற்றி இந்தியா நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு மாலத்தீவு-இந்தியா இராஜதந்திர மோதல் குறித்து கருத்து தெரிவித்த தரூர், "மாலத்தீவு அரசாங்கத்துடனான சீனர்களின் நெருக்கத்தை நாம் மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும்" என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications