முதலிரவிலேயே நான் அப்செட்.. குளிக்கும்போது பார்ப்பாங்க.. நடுநடுங்க வைத்த ஜெயமாலாவும், 3 கொலைகளும்!
சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் கொன்ற மருமகள் வாக்குமூலம் தந்துள்ளார்
சென்னை: "கொலையும் செய்வாள் பத்தினி" என்ற வார்த்தைகளின் சாயலில் இந்த சம்பவத்தை பார்ப்பதா? அல்லது மனசாட்சியே இல்லாமல் 3 உயிர்களை துடிக்க துடிக்க கொன்ற மனித மிருகத்தின் கொடுங்கோன்மையை நினைத்து பதறுவதா என்று தெரியவில்லை.. சவுகார்பேட்டை கொலை சம்பவம் இந்த வருடத்தையே அசைத்து பார்த்துள்ள கோர வன்முறை சம்பவம் ஆகும்!
தலித் சந்த்-க்கு 74 வயதாகிறது.. மனைவியும் உயிரோடு இருக்கும் நிலையில், மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்துள்ளார்.. கைதான ஜெயமாலாவின் வாக்குமூலத்தின் சுருக்கம் இதுதான்:
முதலிரவிலேயே நான் அப்செட்.. கணவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.. எப்படியோ 2 பிள்ளைகளையும் பெற்றெடுத்தேன்.. என் மாமியார் வீட்டை சேர்ந்த உறவினர்கள் 2 பேர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்... நான் டிரஸ் மாற்றும்போதும், குளிக்கும்போதும் ரகசியமாக பார்த்து பார்த்து ரசித்தனர்.. ஒருநாள் நான் குளிக்கும்போது என்னை ரகசியமாக ஒளிந்து பார்த்ததை நான் பார்த்துட்டேன். இதுகுறித்து கணவனிடம் கூறினேன்... ஆனால் அதை அவர் கண்டுக்கவே இல்லை. பின்னர் எனது கணவர் கண்முன்னாடியே எனக்கு பாலியல் கொடுமைகள் அரங்கேறின.
மாமியார்

கூட்டு குடும்பம்
இதை எனது மாமியாரிடம் சொன்னேன்.. இதெல்லாம் கூட்டு குடும்பத்தில் சகஜம் என்று சொல்லிவிட்டார். 4 கோடி ஜீவனாம்சம் கேட்டேன்.. ஆனால், 25 லட்சத்தை மட்டும்தான் தருவதாக சொன்னார்கள்.. இதுதான் ஆத்திரம் வந்தது.. என்னை அசிங்கமாக பேசினார்கள்.. கொலை செய்ய முடிவு செய்தோம்.. என் தம்பிகள் என்னை வெளியில் வெயிட் பண்ண சொன்னார்கள்.. ஆனால், நான் எனது கணவர் குடும்பம் துடித்து சாவதை நேரில் பார்க்கணும், சந்தோஷப்படணும் என்று சொன்னேன்.. அப்பறம்தான் இந்த கொலை நடந்தது" என்றார்.

செக்ஸ் டார்ச்சர்
இந்த சம்பவத்தில், ஜெயமாலாவின் தம்பி கைலாஷ் அவருக்கு தெரிந்த ஒய்வு பெற்ற விமான படை அதிகாரியிடம் இருந்து கைத்துப்பாக்கியை வாங்கி ஒத்திகை பார்த்துள்ளார்.. சத்தம் அவ்வளவாக வெளியே வராத துப்பாக்கியை தேர்ந்தெடுத்துள்ளனர்.. துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளனர்.. சொத்துக்காக கொலை என்றாலும், செக்ஸ் டார்ச்சருக்காக கொலை என்றாலும், கொலை கொலைதான்.. இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் ரொம்பவும் சாதுவானர்கள்.. எந்த வம்பு தும்புக்கும் போகாத மென்மையானவர்கள்.. ஆனால் ஜெயமாலாவின் குரூரமும், பழிக்குப்பழி சம்பவமும் அதிர வைத்துள்ளது.

கயவர்கள்
எத்தனையோ பெண்கள் தங்கள் கற்பை காப்பாற்றி கொள்ளவும், கயவர்களிடம் சிக்காமல் இருக்கவும் கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.. மேலும் பலர் சொத்துக்காகவும், அற்ப சுகத்துக்காகவும் ஒன்றும் அறியாத அப்பாவி கணவன்களையும், பெற்ற பிள்ளைகளையும்கூட ஈவிரக்கமில்லாமல் கொன்றுள்ளனர்.. அப்படித்தான் கேரளத்து மட்டன் சூப் ஜோலி முதல் அயனாவரம் வரை மேனகா வரை நம்மை பதற வைத்தவர்கள்.

அபாயம்
ஆனால், சவுகார்பேட்டை ஜெயமாலா இதில் வித்தியாசமானவர்.. அபாயகரமானவர்.. ஆபத்தானவர்.. ஓயாமல் கொட்டிக் கொண்டே இருந்தால், திருப்பி தாக்கினால் என்னாகும் என்பதைதான் ஜெயமாலா சம்பவம் நிரூபித்துள்ளது. இவ்வளவு காலம் நமக்கு சவுகார்பேட்டை என்றாலே இனம்புரியாத குஷி உணர்வு வந்த நிலையில், இனி ஜெயமாலாவின் அசுர குணமும், 3 உயிர்களின் ரத்தவாடையும் வந்து வந்து போகும்!
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications