அதிர்ச்சி.. ஹாஸ்டலுக்குள் பரவிய தொற்று.. 9 அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா..!
அண்ணா பல்கலை மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது... அவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் ஆவர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், முழுமையாக நீங்கவில்லை.. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 1,01,523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில், 703 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.. 7,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 728 பேர் நேற்று ஒரேநாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,88,142 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர்.. தமிழகத்திலேயே, அதிகபட்சமாக நேற்று சென்னையில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல் கோவையில்-117, செங்கல்பட்டு- 56, ஈரோடு-58, திருப்பூர்-50 பேருக்கு தொற்று பதிவாகியதாக கூறப்பட்டிருந்தது.

கல்லூரிகள்
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது... என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை கற்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாஸ்டல்
கடந்த 6-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது.. இதனால், அவரோடு ஹாஸ்டலில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் உடனடியாக டெஸ்ட் செய்யப்பட்டது.. அப்போதுதான், மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த 9 மாணவர்களும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கிருமிநாசினி
நோய் பாதிப்பு உறுதியான உடனேயே மாணவர்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் ரூம்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.. அதுமட்டுமல்ல, ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மற்ற மாணவர்கள் அனைவருமே, தொடர்ந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல், 14 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே கிளாஸ்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

சர்ட்டிபிகேட்
இதுதவிர ஹாஸ்டலுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சர்ட்டிபிகேட் கொண்டு வருவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி, பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது... கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 9 மாணவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்றும், அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.. ஆனால் பாதிப்புக்கு உள்ளான அந்த 9 மாணவர்களும் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியவர்களாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications