"விதி வழி செய்தால்".. தற்கொலை செய்த கோவை டிஐஜியின் "அந்த" ஆடியோ.. ப்பா எப்படிப்பட்ட மனுஷன்!
சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் அன்பான அதிகாரி, பண்பான குணம் கொண்டவர், மக்களிடம் கனிவாக பேச கூடியவர் என்று கூறப்படுகிறது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். . எப்போதும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்றும் வாக்கிங் சென்று உள்ளார். வாக்கிங்கில் சில சக அதிகாரிகளை பார்த்து இயல்பாக பேசி இருக்கிறார். காலை 5 மணிக்கு வாக்கிங் சென்றவர் காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

முதலில் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு அங்கிருந்து கேம்ப் ஆபிஸ் வந்துள்ளார். அங்கே வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். உங்க துப்பாக்கியை கொடுங்க என்று ரவியிடம் ஆர்டர் போட்டு உள்ளார் விஜயகுமார் .
இவர் உயர் அதிகாரி என்பதால் ரவியும் துப்பாக்கியை கொடுத்துள்ளார். ஆனால் அப்போதே அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. விஜயகுமார் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் இங்கும் அங்கும் சென்றுள்ளார். இதையடுத்து விஜயகுமார் சில நிமிடங்கள் கழித்து தனது அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் உள்ளே இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே தனியாக கிடந்த அவர் உடலை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு அவரின் உடலை எடுத்து சென்ற போலீசார்.. அவர் மரணம் அடைந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
ஆடியோ: பொதுவாக போலீசார்.. முக்கியமாக உயர் அதிகாரிகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். கடுமையாக இருப்பார்கள். தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளிடம் கடுப்பாக இருப்பார்கள் என்றுதான் கூறப்படுவது வழக்கம். ஆனால் தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் அன்பான அதிகாரி, பண்பான குணம் கொண்டவர், மக்களிடம் கனிவாக பேச கூடியவர் என்று கூறப்படுகிறது.
சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பதவி வகித்து வந்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சக அதிகாரிகளிடம் மிக அன்பாக கனிவுடன் இவர் நடப்பார்.. இவர் மிக நல்ல மனிதர் என்றும் கூறப்படுகிறது. திருவாரூரில் எஸ்பியாக இருந்து இவர் பணி மாறுதல் பெற்ற போது தனக்கு கீழ் வேலை பார்த்த அதிகாரிகளுக்கு இவர் அனுப்பிய ஆடியோவே இதற்கு தக்க உதாரணம்.
பணி மாறுதலுக்கு பின் இவர் பேசிய ஆடியோவில், திருவாரூர் மாவட்டத்தில் காவலர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டனர். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலும் எனக்கு பெயர் கொடுத்தது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் எனக்கு கிடைத்தது. நீடாமங்கலம் கொலை, முத்துப்பேட்டை இந்து முஸ்லீம் பிரச்சனை போன்றவைகள் பெரிய சிக்கலாக இருந்தாலும் அதை எல்லாம் நாம் சமாளித்தோம்.
இதை சிறப்பாக எதிர்கொள்ள உங்களின் பணிகளே காரணம். நாம் மிகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டோம். உங்கள் பணிகளால் பிரச்சனைகள் உடனே தீர்க்கப்பட்டன. உங்களின் சீரான பணிக்கு நன்றி. விதி வழி செய்யும் என்றால் மீண்டும் உங்களை சந்திப்பேன், என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் அவரின் தற்கொலை போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை: முதல் கட்ட தகவலின்படி அவர் பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் சுட்டுக்கொண்டதாக கூறியுள்ளனர். அதாவது உடலுக்கு மிக அருகில் வைத்து துப்பாக்கியால் அவர் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார். அவரின் உடல் பெரும்பாலும் அவரின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தூக்கமின்றி இன்சோம்னியா மூலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அதோடு போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் அது பற்றி தெரிவித்து இருந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications