விஜய் முதல்வர்! ஆபாச பட வழக்கில் சிக்கியவர் சட்டத்துறை அமைச்சராம்! விஜய் ரசிகர்கள் உலகமே தனிதான்!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் வெற்றிப்பெறுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
நம்பிக்கை எல்லாம் ஓகே தான். ஆனால், விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தால் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும்? யாரெல்லாம் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார்கள் என்று வர்ணித்து உத்தேச அமைச்சரவை பட்டியலை வெளியிட்டிருப்பது எல்லாம் ரொம்ப ஓவராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அமைச்சரவை பட்டியலை பாருங்க
- விஜய் - முதல்வர், உள்துறை, மகளிர் நலன், குழந்தைகள் மேம்பாடு
- செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை (நீர்வளம்)
- ஆதவ் அர்ஜுனா - செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத் துறை
- என். ஆனந்த் - போக்குவரத்துத் துறை
- வெங்கட் ரமணன் - நிதித்துறை
- அருண்ராஜ் - உணவுத் துறை
- நிர்மல்குமார் - பிற்படுத்தப்பட்டோர் & சீர்மரபினர் நலத்துறை
இப்படி லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது. மொத்தம் 29 அமைச்சர்களுக்கு பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இதில் சிலருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறையை பார்த்தால்.. "என்ன விஜய் இதெல்லாம்?" என்று கேள்வி எழுப்ப தோன்றுகிறது.
சாதி வெறியருக்கு.. சமூகநீதித் துறை
அதாவது, கம்பம் தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றால் அவர் சமூகநீதித் துறை அமைச்சராக அமர்த்தப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சமூகத்தில் வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சமமான வாய்ப்புகளையும் உரிமைகளையும் உறுதி செய்வதே சமூகநீதித் துறையின் முதன்மை நோக்கமாகும். கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இத்துறை கண்காணிக்கும்.
மனசாட்சியே இல்லையா?
இப்பேர்பட்ட பொறுப்புக்கு, ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தின் தலைவரை எப்படி அமைச்சராக நியமிக்க முடியும்? என்று கேள்வி எழுகிறது. 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனர்தான் இந்த பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா. அவரை சமூகநீதித் துறை அமைச்சராக ஆக்கினால், எப்படி பொருத்தமாக இருக்கும்?
ஆபாசப் பட வழக்கில் சிக்கியவருக்கு அமைச்சர் பதவி?
அதேபோல இந்த உத்தேச அமைச்சர் பட்டியலில், சட்டத்துறை அமைச்சர் பதவி ஆண்டிபட்டி லெப்ட் பாண்டிக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லெப்ட் பாண்டி மீது கொலை மிரட்டல், ஆபாசப் படங்கள் அனுப்பியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 9 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை அவரே தனது வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது விஜய் ரசிகர்களின் உலகமே தனிதான் என்று சொல்ல தோன்றுகிறது.. என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications