குளிக்கும்போது வீடியோ எடுத்து.. திமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. அதிர வைத்த 2020..!
2020-ல் மறக்க முடியாத பரிதாப தற்கொலை செங்கல்பட்டு சசிகலாவின் மரணம்
சென்னை: சசிகலா என்ற அப்பாவி பெண்ணின் மரணம் இந்த 2020 வருடத்தையே தமிழகத்தை அசைத்து பார்த்துவிட்டது.. இந்த இளம்பெண்ணை, திமுக பிரமுகரும், அவரது சகோதரரும் சேர்ந்து 4 வருஷமாக மிரட்டி மிரட்டியே சீரழித்த கொடுமையும் அரங்கேறியது!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது.. செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்தவர் சசிகலா... கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஃபேக்டரியில் வேலை பார்த்து வந்தார்.
லாக்டவுன் சமயத்தில், கம்பெனி மூடப்பட்டிருந்ததால், வீட்டில்தான் இருந்து வந்தார்.. ஒருநாள் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. செய்யூர் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம், தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அருண்பாபு செய்யூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

சுடுகாட்டில் போராட்டம்
அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சாவுக்கு காரணம், சசிகலா சடலத்தை தோண்டி இன்னொரு முறை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அப்போதுதான் இந்த விவகாரம் வெடித்து கிளம்ப தொடங்கியது.

திமுக பிரமுகர்கள்
புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும்தான்.. இவர்கள் சசிகலாவை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.. சசிகலா குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியும் வந்துள்ளனர். 4 வருடமாக இந்த நரக வேதனையில் சசிகலா தவித்து வந்துள்ளார்.

நிம்மதி
வீட்டில் தனக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தையும் அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர்.. தன்னை கடைசிவரை நிம்மதியாக வாழ விடாத நிலையில், மனமுடைந்த சசிகலா தூக்கு போட்டு தொங்கியே விட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கு பிறகு, புருஷோத்தமன் போலீசில் சரணடைந்தார்.. கட்சியில் இருந்தும் அவரது சகோதரர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

சசிகலா மரணம்
சசிகலா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சந்திரா சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்."நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்திலோ வழக்கு பதிவு செய்யாமல், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சி என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சாட்சிகள்
இதையடுத்து, செய்யூர் காவல் நிலையம் தொடர்ந்து விசாரணையை நடத்த அனுமதியளித்த நீதிபதி, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை நடத்தி 12 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கின் முழு விசாரணையையும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

முகத்திரை
வழக்கு முடித்து வைக்கப்பட்டாலும், சசிகலாவின் உயிர் பறிபோனது போனதுதான்.. தவறே செய்யாமல் ஒரு அப்பாவி பெண் உயிரிழந்துவிட்டார்.. இப்படி புழுவாய் துடித்து கொண்டு தவித்து வரும் எத்தனையோ சசிகலாக்கள் துணிந்து வெளியே வர வேண்டும்.. கயவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்!












Click it and Unblock the Notifications