சென்னை எங்கே போகுது.. "கால்பாயை" ஹோட்டலுக்கு கூப்பிட்டு ஜாலியாக இருந்த பெண்.. செயினால் வெளியான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களை கடந்து தற்போது சென்னையில் கால்பாய் கலாச்சாரம் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'ஆப்’ மூலம் தங்களை தொடர்பு கொள்ளும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துக் கொள்வதோடு, அவர்களை நகை, பணத்தையும் அபகரித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் அப்படி ஒருவரிடம் பணத்தை இழந்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்..

இந்த நவீன செல்போன் யுகத்தில் எந்த அளவு தங்களது கருத்துக்களை பொதுமக்கள் வெளியிட முடியுமோ அதே அளவு பிரச்சனைகளும் இருந்திருக்கிறது. பண மோசடி ஏன் வாழ்க்கையே தொலைக்கும் நிகழ்வுகளும் இந்த செல்போன் செயலிகளால் நிகழ்ந்து வருகிறது.

crime police


பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் இருக்க, தற்போது டின்டர் அன்பே உள்ளிட்ட டேட்டிங் செயலிகளும் இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஓரினச்சேர்க்கைக்கு கூட செயலிகள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து மோசடி கும்பலும் தங்களது கைவரிசைகளை மற்றொருபுறம் அரங்கேற்றி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் செல்போன் ’ஆப்’ மூலம் இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது கூட அனைவருக்கும் தெரிந்ததே.

இது ஒருபுறம் இருக்க குடும்பம், திருமணம், சமூகம், கலாச்சாரம் என பண்டைய பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் தமிழகத்தில் திருமணம் தாண்டிய உறவுகளுக்காக வெளிநாட்டு டேட்டிங் செயல்களில் சுமார் 20 சதவீதம் பேர் பதிவு செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கால் கேர்ள்ஸ் போல, சென்னையில் கால் பாய் கலாச்சாரமும் அதிகரித்துள்ளதாக கூறுவதோடு, அவர்களிடம் நகை பணமும் பறிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆன்லைனில் டேட்டிங் செயலிகள் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போல கால் பாய் டேட்டிங் செயலிகளும் ஆன்லைனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் இளைஞர் ஒருவர் ஜிம்முக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களையும் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் ஒரு சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். கை நிறைய பணம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சில இளைஞர்கள் இப்படி கால் பாயாக உலா வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கூட சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இளம்பெண் ஒருவர், ’கால் பாய் டேட்டிங்’ செயலியை டவுன்லோடு செய்து இருக்கிறார். அதில் ஒரு இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்பட அந்த இளைஞரின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இதை அடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தான் இருப்பதாகவும் அங்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார்.

இதையடுத்து அந்த இளம் பெண் அந்த இளைஞரை சந்தித்திருக்கிறார் இருவரும் தனிமையில் இருந்த நிலையில் அவருக்கு மூவாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டுக்கு வந்த போதுதான், தான் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அதே நேரத்தில் வெளியே சொன்னால் தனக்கு பிரச்சனை வரலாம் என அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நகை குறித்து வீட்டில் இருப்பவர்கள் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து டேட்டிங் செயலி மற்றும் அந்த இளைஞரின் செல்போன் ஆகியவற்றை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இளைஞர்களும் இளம் பெண்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்துகின்றனர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+