கணவனை துண்டு துண்டாக வெட்டிய வீடியோவை மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்த மனைவி.. உறைந்த சென்னை போலீஸ்
சென்னை: சென்னையை உலுக்கிய பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கின் பின்னணியில், கள்ளக்காதல் விவகாரமும் கணவனின் கொடூரக் கொலையும் அம்பலமாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் சடலம் அருகே அந்த பெண் செய்த காரியம் போலீசாரையே வெலவெலக்க வைத்துள்ளது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கடந்த 5ம் தேதி கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேசில், தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

பெரம்பூர் சூட்கேஸ்
உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்ததால் மருத்துவப் பின்னணி கொண்டவர்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும், தனியார் மருத்துவமனைகளில் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என்றும் போலீசார் தேடி வந்தனர்.
அப்போது சடலத்தின் உடலில் இருந்த ஷார்ட்ஸ் துணியில் இருந்த பார்கோடை (Barcode) வைத்து விசாரணை நடந்தது.. அந்த பிராண்ட் துணியை வாங்கிய 2 பேரின் செல்போன் நம்பர்களை பெற்று போலீசார் தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு பெண் அந்த நம்பரில் எண்ணில் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
காட்டித் தந்த லொகேஷன்
உடனே அந்த செல்போன் லொகேஷனை பின்தொடரப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை அருகே, அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் DP காட்டி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர் புற்றுநோய் நோயாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் உதவியாளராக செயல்பட்டு வந்தது உறுதியானது.
ஆனாலும் போலீசார் அவரை தந்திரமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளி மூலம், வீடு தேவைப்படுவதாகக் கூறி அந்தப் பெண்ணை போலீசார் வாட்ஸ்அப் காலில் பேச வைத்தனர். அப்படித்தான் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையும் மேற்கொண்டனர்.
யார் இந்த ரோகிமா?
பிடிபட்ட பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா (36) என்பதும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் அவருடைய கணவர் அமீர் அலி என்பதும் உறுதியானது.
ரோகிமாவுக்கு அசாம் மாநிலத்தில் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த ரோகிமா அமீர் அலியை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சென்னை தேனாம்பேட்டை தாமஸ் ரோடு ஹவுசிங் போர்டில் வசித்து வந்த அமீர் அலிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி ரோகிமாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தச் சூழலில், தி.நகரில் காய்கறி கடை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவருடன் ரோகிமாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தனது கணவரின் சித்திரவதை தாங்க முடியவில்லை என்று ரோகிமா கூற, அஷ்ரப்போ தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்துள்ளார். ஆனால், கணவனை உயிருடன் விட்டால் நம்மைக் கொன்றுவிடுவான் என அஞ்சிய ரோகிமா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அரிவாள்மனையால் அறுத்த மனைவி
திட்டமிட்டபடி கடந்த 3ம் தேதி இரவு, அமீர் அலிக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்துள்ளனர். அவர் மயங்கிய பிறகு, அரிவாள்மனையால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, சடலத்தின் தலை, கை, கால்களைத் தனித்தனியாக வெட்டித் துண்டித்துள்ளனர்.
துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியங்களைத் தெளித்து, உடற்பகுதியை மட்டும் நீல நிற சூட்கேசில் அடைத்து, கடந்த 5ம் தேதி காலை ரேபிடோ ஆட்டோ மூலம் பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் வீசிச் சென்றுள்ளனர். கை, கால்கள் அடங்கிய பையைக் கால்வாயில் வீசிய கள்ளக்காதலர்கள், வெட்டப்பட்ட தலையைச் செங்கல்பட்டு பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துள்ளனர்.
கணவன் உடல் அருகே செல்பி
போலீசாரின் தீவிர விசாரணையில் ரோகிமா கைதானதைத் தொடர்ந்து, அவரது கள்ளக்காதலன் அஷ்ரப்பும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த அமீர் அலியின் தலையை, வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் போலீசார் இன்று தோண்டி எடுத்து மீட்டனர். இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி ஓட்டேரி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்போது விசாரணையில் வெளிவந்த மிக அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கணவரின் தலை மற்றும் கை, கால்களைத் துண்டு துண்டாக வெட்டும் கொடூரக் காட்சிகளை ரோகிமா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறாராம்.
மீண்டும் மீண்டும் வீடியோ பார்த்து ரசித்து..
அதுமட்டுமின்றி, கணவரின் பிணத்தின் அருகே நின்று சிரித்தபடி விதவிதமாக செல்பி போட்டோக்களையும் எடுத்துள்ளார். இந்த கொடூர வீடியோக்களை அவரும் அவரது கள்ளக்காதலனும் அடிக்கடி போட்டுப் பார்த்து ரசித்து ரசித்து கொண்டாடினார்களாம்.. இதைக்கேட்டு போலீசாரே கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.
மேலும் கொலையை மறைப்பதற்காக அமீர் அலியின் முகநூல் பக்கத்தில் நுழைந்த ரோகிமா, இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு வாழப் பிடிக்கவில்லை, என்னை யாரும் தேட வேண்டாம்" என்று கணவரே எழுதியது போல போஸ்ட் போட்டுள்ளார். இதன் மூலம், உறவினர்கள் யாரும் சந்தேகம் கொள்ளாமல், அவர் மன உளைச்சலில் எங்கோ ஓடிவிட்டார் என நினைப்பார்கள் என்று ரோகிமா நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications