வாணியம்பாடி டாஸ்மாக்கில் ஒயின் பாட்டிலில் விழுந்த ஓட்டை.. ஊசி போட்டு கலப்படம்? திகைத்த திருப்பத்தூர்
சென்னை: அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தொடர் புகார் வந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதற்கு நடுவில், டாஸ்மாக்குகளில் வாங்கும் மதுபானங்களின் தரம் குறித்தும் சந்தேகங்கள் வலம் வருகின்றன. இப்போது என்ன நடந்தது வாணியம்பாடியில்?
மதுபானங்களில் கலப்படம் என்ற புகார்கள் ஆங்காங்கே எதிரொலித்தபடியே உள்ளன.. சமீபத்தில் ஊட்டியிலும் இப்படியான புகார் கிளம்பியது.

ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு வருகின்றனர். மேலும், குளிர் பிரதேசமாக இருப்பதால் வழக்கத்தை விட மது விற்பனை கூடுதலாக உள்ளது. இதை பயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தண்ணீர் உள்ளிட்டவற்றை மதுவில் கலந்து விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு அதிக அளவில் வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள், ஊட்டியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு மற்றும் சோதனைகளை நடத்தினார்கள்.. அப்போதுதான், மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்ததும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மொத்தம் 13 டாஸ்மாக் ஊழியர்கள் ஒரே நேரத்தில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்தசம்பவம் மாநிலம் முழுவதுமே பரபரப்பை தந்திருந்தது.
பாட்டிலில் மிதந்த புழு
அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.. கலெக்டர் ஆபீஸ் எதிரே 9249 என்ற டாஸ்மாக் கடையில், மது பிரியர் ஒருவர் ரூ.135 தந்து மது பாட்டிலை வாங்கியுள்ளார். அந்தப் பாட்டிலில் இறந்த நிலையில் புழு ஒன்று மிதந்துள்ளது. அதை பார்த்த அதிர்ச்சி அடைந்து அவர் டாஸ்மாக் ஊழியரிடம் நியாயம் கேட்டுள்ளார்.. மேலும் தன்னுடைய நண்பர்களுடன் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டார்.
அதற்கு அந்த டாஸ்மாக் கடை ஊழியர், "புழு மிதக்க காரணம் நான் கிடையாது, அந்த மதுபான நிறுவனம்தான் பொறுப்பு " என்று சொன்னாராம்.
அரசு டாஸ்மாக் கடைகள்
இதைக்கேட்டு ஆவேசமான மற்றொரு மதுபிரியர், டாஸ்மாக் கடை முன்பு போடப்பட்டிருந்த டேபிளில் உட்கார்ந்து, மது பாட்டிலை கையில் ஏந்தி, "இதை குடிச்சிட்டு நான் செத்துப்போனால் என் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வாங்க?" என்று ஆவேசமுடன் கேட்டார்.. இதெல்லாம் வீடியோவாகவும் அப்போது வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரம்பூர் டாஸ்மாக் கடையிலும் இப்படியான புகார் கிளம்பியது. அங்குள்ள ஒருவர் வாங்கிய மதுபாட்டிலுக்குள், வெள்ளை நிறத்தில் பசை போல இருந்ததாம்.. அதை பார்த்து கலங்கிப்போன அந்த நபர், பாட்டிலை திறக்காமலேயே வைத்துவிட்டார். பிறகு அதை போட்டோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டார்.
வாணியம்பாடி ஒயின் பாட்டில்
இதோ திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்.. இவர் நேற்று மாலை விஜிலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மதுபாட்டில் வாங்க சென்றுள்ளார்.
அங்கு ஒயின் பாட்டிலையும் காசு தந்து வாங்கியிருக்கிறார்.. அப்போது அவர் வாங்கிய ஒயின் பாட்டிலின் மேல் மூடியில் துளை போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. இதை பார்த்த மற்ற மது பிரியர்களும் அதிர்ந்துபோய் மதுக்கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்..
அரசு மது கடையில் மது பாட்டில்களில் ஊசி செலுத்தப்பட்டு போலி மதுபானம் விற்கப்படுகின்றதா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே பாட்டிலுக்கு 10 ரூபாய்
அப்போதும் ஊழியர்கள் யாரும் சரியான பதிலை சொல்லவில்லை என தெரிகிறது.. உடனே நிர்மல். மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டிலை கையில் வைத்துக் கொண்டு, தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.
அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. நிலையில் ஏற்கனவே அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்று ஏழைகளையும் மக்களை சுரண்டி வரும் அரசு, போலி மதுபான பாட்டில்களையும் விற்று ஏழை எளிய மக்களை சீரழிக்கும் நோக்கில் செயல்படுகிறதா? என்று இணையவாசிகள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications