Exclusive: அது என் கேரக்டரே அல்ல.. தர்மம் vs அதர்மம் - சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் 'பளிச்'
சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உடன் நமது ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பாக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் இதோ,
கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் இருக்கும் நீங்க தொகுதிக்காக என்னென்ன செய்திருக்கீங்க? என்ற கேள்விக்கு, "சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இத்தொகுதியின் தேவைகளை, மக்களின் கோரிக்கைகளை நேரில் களத்திற்கே சென்று கேட்டறிந்து, அங்குள்ள குறைகளை தெரிந்து கொண்டு, சட்டப்பேரவையில் பேசியுள்ளேன்.
அதன் அடிப்படடையில் இங்கு சாலைகள் புதுப்பிக்கப்பட்டது, சீரமைக்கப்பட்டது. சிமெண்ட் சாலையாக இருந்தாலும், தார் சாலையாக இருந்தாலும் மக்கள் அதனை நன்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

பல கேள்விகள்
குறிப்பாக, குடிநீர் திட்டத்திற்காக புதிய பைப் லைன்கள் உருவாக்கி, குடிநீர் தேக்க தொட்டில்கள் உருவாக்கப்பட்டு பல இடங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணி நடந்து வருகிறது. அதேபோல் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சட்டமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பி, அது தொடர்பான உயர் அதிகாரிகளை சந்தித்து, அதன் அடிப்படையில் பல இடங்களில் பணி நடந்து முடிந்துள்ளது. நடைபெற்றும் வருகிறது. அதேபோல், மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மேலே செல்கின்ற மின் வயர்களை, கீழே புதைவிட கம்பிகளாக மாற்றுகின்ற பணிகளும் நடந்துள்ளது.

என் உறுதிமொழி
மக்களுக்கு தொகுதி முழுவதும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யும் உறுதிமொழியை நான் இம்முறை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக 7 ஊராட்சிகளுக்கும், சென்னை மாநகராட்சி தொகுதியில் உள்ள அனைத்து பணிகளுக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாக தங்கு தடையின்றி தண்ணீர் வழங்குவதற்கான உறுதிமொழியை நான் வழங்குகிறேன்

எப்படி வளர்ந்தார்?
எதிர்க்கட்சி வேட்பாளர் யார், அவருடைய குணாதிசயம் என்ன? என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை. நான் என்னுடைய பணிகளில் மட்டுமே 100 சதவிகிதம் கவனம் செலுத்தி செயல்படுத்துவது வழக்கம். அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கே தெரியும். ஆரம்பக் காலத்தில் இருந்து இப்போது எப்படி இந்த நிலைக்கு அவர் வளர்ந்திருக்கிறார் என்று தெரியும்.

லட்சம் வாக்குகள்
இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கு இடையே நடக்கும் தேர்தல். ஆகவே இதைப் பற்றியெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள். லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிப் பெறுவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications